Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/கத்தார் மனவளக்கலை மன்றம் சார்பில் சர்வதேச யோகா தின விழா

கத்தார் மனவளக்கலை மன்றம் சார்பில் சர்வதேச யோகா தின விழா

கத்தார் மனவளக்கலை மன்றம் சார்பில் சர்வதேச யோகா தின விழா

கத்தார் மனவளக்கலை மன்றம் சார்பில் சர்வதேச யோகா தின விழா

ஜூன் 22, 2024


Google News
Latest Tamil News
கத்தாரில் உள்ள SKY மனவளக்கலை மன்றத்தில் 10வது சர்வதேச யோகா தினம் வெகுவிமரிசையாக அல்வுக்கைர் கிரீன் ஸ்டேடியத்தில் கொண்டாடப்பட்டது. ரேணுகா இறைவணக்கம், குரு வணக்கம் பாட, பேராசிரியர் இளஞ்செழியன் தவம்* நடத்தினார். துணைப் பேராசிரியர் செ. இராசமாணிக்கம் சர்வேதச யோகா தினத்தைப் பற்றியும், உலக சமுதாய சேவா சங்கம் பற்றியும், கத்தாரில் அதன் தொண்டு பற்றியும் கூறி வரவேற்றார்.

தொடர்ந்து நம் உலகளாவியத் தொண்டினை விரிவாக்கம் செய்யும் விதமாக நம் மன்றத்தில் Vethathiriyam Voyage என்னும் புதிய இலச்சினையை வெளியீடு செய்து பேராசிரியர் முத்து சிறப்புரை ஆற்றினார். சமூக ஊடகங்களில் இனி செய்ய வேண்டியது என்ன என்பதை விளக்கும் விதமாக நேதாஜி காணொளி வெளியிட்டு வழிகாட்டுதல் உரை வழங்கினார்.



அடுத்ததாக இன்றைய நாளின் சிறப்பு நிகழ்ச்சியாக பாடல் மற்றும் கவிதையுடன் கூடிய பட்டிமன்றம் நடந்தது முத்தாய்ப்பாக இருந்தது. பேராசிரியர்கள் ஆனந்தராஜ், குமரேசன், துணைப் பேராசிரியர் கவிதா முருகேசன், சித்ரா சங்கர் பங்கேற்க, பேராசிரியர் முத்து நடுவராக பங்கேற்று ஆனந்தமாக வாழ வடிகட்டணுமா? படிகட்டணுமா? என்ற தலைப்பில் வழங்கிய பட்டிமன்றம் வெகு சிறப்பாக இருந்தது. இதில் மகரிஷியின் கவிதைகளை புதிய ராகத்தில் ரேணுகாவும் துணைப் பேராசிரியர் செ. இராசமாணிக்கமும் சேர்ந்து பாடியது ஒரு புது அனுபவமாக இருந்தது.



இறுதி நிகழ்வாக சமூக வலைத்தளங்களில் அனுபவக் காணொளிகளைப் பகிர்வது சம்பந்தமாக பேராசிரியர் ஆனந்தராஜ் சிற்றுரை வழங்கினார். துணைப் பேராசிரியர் இராசமாணிக்கம் நன்றியுரை வழங்க, பிரம்ம ஞானப் பாடலை ரேணுகா பாட நிகழ்வானது இனிதே முடிவடைந்தது. பேராசிரியர் மாயன் முத்து இனிப்பு வழங்கினார். அனைவரும் இணைந்த குழுப்படத்தை அருள்நிதி ரியாஸ் குழுவும், நேரலை ஒளிபரப்பை முத்தழகுவும் கவனித்துக் கொள்ள ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் செ.இராசா தொகுத்து வழங்கினார். இதில் நேரிலும் இணையத்திலும் 200க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



- தினமலர் வாசகர் செ.இராசா









      Our Apps Available On




      Dinamalar

      Follow us