/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/கத்தாரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இரங்கல் கத்தாரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இரங்கல்
கத்தாரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இரங்கல்
கத்தாரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இரங்கல்
கத்தாரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இரங்கல்

கத்தாருக்கான இந்தியத் தூதர் விபுல், இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலர் டாக்டர் வைபவ் தண்டலே ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். முன்னாள் பிரதமரின் மறைவை முன்னிட்டு, அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ஐ.சி.சி.யின் தலைவர் ஏ.பி. மணிகண்டன், ஐ.சி.பி.எஃப்-ன் தலைவர் ஷாநவாஸ் பாவா, ஐ.எஸ்.சி.யின் பொதுச் செயலாளர் நிஹாத் அலி, ஐ.பி.பி.சி.யின் தலைவர் தாஹா முஹம்மது, துணைத் தலைவர் அப்துல் சத்தார் மற்றும் டாக்டர். மோகன் தாமஸ் ஆகியோர் தங்கள் இரங்கல் செய்தியைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு டாக்டர் சிங்கின் பங்களிப்பை விபுல் எடுத்துரைத்தார். மேலும் அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துகொண்ட இரங்கல் செய்தியிலிருந்து ஒரு பகுதியை தனது உரையின் போது படித்தார்.
ஐ.சி.சி.யின் பள்ளி நடவடிக்கைகளின் பொறுப்பாளர் சாந்தனு தேஷ்பாண்டே அஞ்சலி கூட்டத்தின் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். ஐ.சி.சி.யின் செயலாளர் ஆபிரகாம் ஜோசப் நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்வில் ஐ.சி.சி.யின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியப் பிரதிநிதிகள், கத்தாரில் இயங்கிவரும் இந்திய சமூக அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் மன்மோகன் சிங் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, தத்தம் இரங்கல் செய்தியை பதிவேட்டில் எழுதினர்.
- நமது செய்தியாளர் எஸ். சிவ சங்கர்