/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் திரைய்யா டல்லா கிளை நடத்திய இரத்ததான முகாம்ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் திரைய்யா டல்லா கிளை நடத்திய இரத்ததான முகாம்
ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் திரைய்யா டல்லா கிளை நடத்திய இரத்ததான முகாம்
ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் திரைய்யா டல்லா கிளை நடத்திய இரத்ததான முகாம்
ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் திரைய்யா டல்லா கிளை நடத்திய இரத்ததான முகாம்

இரத்ததான முகாமிற்கான அறிவிப்பு செய்தவுடன் அயராத உழைப்பாலும் , தொடர் அழைப்பு பணியாலும் இறைவனின் கிருபையாலும் ரியாத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர் .
குருதி வழங்கிய அனைவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஜூஸ் மற்றும் பழங்களுடன் பரிசு பை வழங்கப்பட்டது.
முகாமிற்கு தோழமை அமைப்புகளின் சார்பில் NRT சட்டத் துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும். NRTIA சவுதி மண்டல துணை அமைப்பாளர் மருத்துவர் சந்தோஷ், யுனிவர்சல் வெளிநாட்டு தமிழர் நலச் சங்க சையது மறைக்காயார், சவுதி நியூஸ் ரியாஸ் மற்றும் அனீஸ் ஆகியோரும் மற்ற தோழமை உறவுகளும் வருகை தந்து நிகழ்ச்சியை மெருகூட்டினர்.
முகாம் வெற்றிகரமாக நடைபெற்றதற்காக களப்பணியாற்றிய காலை , மதிய உணவு, தேனீர், பழரசம், தண்ணீர் பழங்கள் உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்து தந்த, வாகன ரீதியாக உதவி செய்த , ஊடக ரீதியாக உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் , மருத்துவமனை ஊழியர்களுக்கும் மேலும் இந்த முகாம் எல்லா வகையிலும் சிறக்க உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகளுக்கும் , செயற்குழு & பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் மருத்துவ அணி உள்ளிட்ட இதர அணி நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
உங்கள் அனைவரது உழைப்பையும் பங்களிப்பையும் எல்லாம் வல்ல அந்த ஏக இறைவன் அங்கீகரித்து நன்மைகளை வழங்கி அருள் புரிவானாக!!!
என்றும் கடல் கடந்த மனிதநேய சேவையில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ( IWF ) திரையா டல்லா கிளை ரியாத், மத்திய மண்டலம், சவூதி அரேபியா
- தினமலர் வாசகர் ஷாஜஹான் யன்பு