Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/ஷார்ஜாவில் நூல் வெளியீட்டு விழா

ஷார்ஜாவில் நூல் வெளியீட்டு விழா

ஷார்ஜாவில் நூல் வெளியீட்டு விழா

ஷார்ஜாவில் நூல் வெளியீட்டு விழா

பிப் 21, 2025


Google News
Latest Tamil News
ஷார்ஜா: ஷார்ஜா, அல் மஜாஸ் பகுதியில் அமைந்துள்ள ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் திண்டுக்கல் கவிஞர் நாகூர் பிச்சை எழுதிய 'பிறப்பும் சிறப்பும்' நூல் வெளியீட்டு விழா நடந்தது. திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓத, அதனையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இஸ்லாமிய இலக்கியக் கழக ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதிலும், அதனை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதிலும் கழகம் முக்கிய பணியை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.

இஸ்லாமிய இலக்கியக் கழக தலைவர் முனைவர் சேமுமு முகமதலி, பொருளாளர் எஸ்.எஸ். ஷாஜஹான், இலங்கை காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஆகியோர் கவிஞர் நாகூர் பிச்சை எழுதிய பிறப்பும் சிறப்பும் நூலை வெளியிட முதல் பிரதியை அயலக தமிழர் நலவாரிய வளைகுடா உறுப்பினர் எஸ்.எஸ். மீரான் பெற்றுக் கொண்டார். சிறப்பு விருந்தினர்கள் கவிஞரின் எழுத்தாற்றலை பாராட்டினர். அவர் மேலும் சிறப்புக்களை பெற வேண்டும் என வாழ்த்தினர்.



இளையான்குடி அபுதாஹிர், ஏகத்துவ மெய்ஞான சபையின் அதிரை ஷர்புதீன், இந்தியர் நலவாழ்வு பேரவையின் பரமக்குடி ஏ.எஸ். இப்ராஹிம், கற்றல் கல்வி மைய தலைவர் முனைவர் ரோஹிணி, கவிழேந்தல் கவிதா சோலையப்பன், மாணவர்கள் முகுந்த, மிர்துளா, திண்டுக்கல் ஜமால் முஹைதீன், ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முஹம்மது முஹிப்புல்லா, அஹில் முஹம்மது, நவாசுதீன், கட்டுமாவடி பைசுர் ரஹ்மான், மன்னர் மன்னன், காதர் ஹுசைன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.



நூலாசிரியர் கவிஞர் திண்டுக்கல் நாகூர் பிச்சை ஏற்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சி தனது எழுத்தார்வத்தை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றார்.



- நமது செய்தியாளர் காஹிலா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us