/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மருத்துவ சேவை அணி சார்பில் இரத்ததான முகாம்ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மருத்துவ சேவை அணி சார்பில் இரத்ததான முகாம்
ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மருத்துவ சேவை அணி சார்பில் இரத்ததான முகாம்
ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மருத்துவ சேவை அணி சார்பில் இரத்ததான முகாம்
ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மருத்துவ சேவை அணி சார்பில் இரத்ததான முகாம்

இரத்ததான முகாமிற்கான அறிவிப்பு செய்தவுடன் ரியாத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர் . மேலும் நேரமின்மை காரணமாக , இன்னும் பல சகோதரர்கள் இரத்ததானம் செய்ய முடியாமல் வருத்தத்துடன் திரும்பி சென்றனர்.
குருதி வழங்கிய அனைவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பழங்களுடன் பரிசு பை வழங்கப்பட்டது.
முகாம் வெற்றிகரமாக நடைபெற்றதற்காக களப்பணியாற்றிய சகோதரர்களுக்கும் , காலை & மதிய உணவு ஏற்பாடு செய்து தந்த சகோதரர்களுக்கும், வாகன ரீதியாக உதவி செய்த சகோதரர்களுக்கும் , ஊடக ரீதியாக உதவிய சகோதரர்களுக்கும் , மருத்துவ ஊழியர்களுக்கும் , இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் , சுமைசி மருத்துவமனை நிர்வாகிகளுக்கும் , தண்ணீர் , தேநீர் , குளிர்பானம் மற்றும் பழங்கள் போன்றவைகளை ஏற்பாடு செய்து தந்த சகோதரர்களுக்கும், இந்த முகாம் சிறக்க எல்லா வகையிலும் உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் , மதிய உணவு வழங்கிய *தம்பிஸ் உணவகத்திற்கும்,* மண்டல & கிளை நிர்வாகிகளுக்கும் , செயற்குழு & பொதுகுழு உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
ரியாத் மத்திய மண்டல மருத்துவ சேவை அணி சார்பாக நடைபெற்ற இந்த முகாமிற்கு அனுமதி உள்ளிட்ட உழைப்புகளை மேற்கொண்ட சமூக நலத்துறை நிர்வாகிகளுக்கும் பம்பரம் போல் செயலாற்றிய மருத்துவ சேவை அணி பொறுப்பாளர்கள் மற்றும் மண்டல நிர்வாகிகள் , உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.
- தினமலர் வாசகர் ஷாஜஹான் யன்பு