ஜூன் 21, 2025

மஸ்கட்: மஸ்கட்டின் பௌசர் பகுதியில் உள்ள ரத்ததான மையத்தில் இந்திய சமூக நல சங்கத்தின் சார்பில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக இந்திய தூதர் ஜி.வி. ஸ்ரீனிவாஸ் கலந்து கொண்டார். பொதுமக்கள் பலர் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்தனர். அவர்களுக்கு இந்திய தூதர் பாராட்டு சான்றிதழை வழங்கி கௌரவித்தார்.
- நமது செய்தியாளர் காஹிலா