
துபாய்: துபாய் அல் ஜதாஃப் பகுதியில் அமைந்துள்ள துபாய் சுகாதார ஆணைய இரத்த தான மையத்தில் கிரீன் குளோப் (Green Globe) மற்றும் கீழை கம்யூனிட்டி சென்டர் (KCC) ஆகியவை இணைந்து ரத்ததான முகாமை சிறப்புடன் நடத்தினர். இந்த இரத்ததான முகாமில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று இரத்த தானம் வழங்கினார்கள்.
இந்நிகழ்வின் சிறப்பான ஏற்பாடுகளை கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் அபுபக்கர் மற்றும் கீழை கம்யூனிட்டி சென்டர் (KCC) இணைந்து மேற்கொண்டனர். மேலும் இரத்ததான முகாமிற்கு முழு ஒத்துழைப்பு அளித்ததற்காக துபாய் சுகாதார ஆணைய ரத்ததான முகாம் மைய அலுவலர்கள், ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- நமது செய்தியாளர் காஹிலா