
அஜ்மான்: அஜ்மான் இந்திய சங்கத்தில் அமீரக சுகாதாரம் மற்றும் தடுப்புத்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு சங்க தலைவர் அப்துல் சலா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ரூப் சித்து வரவேற்புரை நிகழ்த்தினார்.
சாயா தேவி உள்ளிட்ட குழுவினர் முகாமுக்கு தேவையான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் முகாமில் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா