/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/அல்-அசா தமிழ்ச் சங்கம் 5ஆம் ஆண்டு தீபாவளி விழாஅல்-அசா தமிழ்ச் சங்கம் 5ஆம் ஆண்டு தீபாவளி விழா
அல்-அசா தமிழ்ச் சங்கம் 5ஆம் ஆண்டு தீபாவளி விழா
அல்-அசா தமிழ்ச் சங்கம் 5ஆம் ஆண்டு தீபாவளி விழா
அல்-அசா தமிழ்ச் சங்கம் 5ஆம் ஆண்டு தீபாவளி விழா

தமிழ்த்தாய் வாழ்த்து பாடி மற்றும் குத்துவிளக்கேற்றி விழா தொடங்கி வைக்கப்பட்டது. அல்-அசா தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்கள் முனைவர் நாகராஜன் கணேசன் மற்றும் முனைவர் பரமசிவன் மணி தொகுத்து வழங்க, ஷர்மிளா பரமசிவன், தீபாவளியின் முக்கியத்துவத்தை விளக்கி, அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “இந்த தீபாவளி, ஒற்றுமை, அன்பு மற்றும் அனைவருக்கும் நல்வாழ்வு அளிக்கும் நாளாக இருக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களாக சிக்கந்தர் பாபு (செயலாளர், சவூதி அரேபியா தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு), உமா ஷங்கர் (பொருளாளர், சவூதி அரேபியா தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு) கலந்துகொண்டு, சவூதி அரேபியா தமிழ்ச் சங்க கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். விழாவில் அல்ஹசாவில் இருந்து மட்டுமல்லாமல் தம்மாம் கோபர் ஆகிய நகரங்களில் இருந்தும் தமிழர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.
விழாவின் முக்கிய அம்சங்களாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள், யோகா, சிறப்பு கலைஞர்களின் இசை, பாடல்கள் மற்றும் நடனங்கள் நடைபெற்றது. இதில் குழந்தைகள் பலர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
விழாவில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் தீபாவளி சிறப்பு பரிசுகள் வழங்கி மகிழ்விக்க பட்டது.
இந்த விழாவில் அனைவரும் சிறப்பு உணவு மற்றும் தித்திக்கும் இனிப்புகள் உண்டும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளியின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த விழாவினை அனைத்து மதத்தினரும் ஒன்றுபட்ட ஒரே குடும்பமாக கொண்டாடியது அனைவருக்கும் இனிய நினைவுகளை வழங்கியது.
விழா ஏற்பாடுகளை முனைவர் பரமசிவன் மணி, முனைவர் நாகராஜன் கணேசன், முனைவர் அருணா நாகராஜன், ஷர்மிளா பரமசிவன், ஆயிஷா முக்தர், ரவூப், ஷாலிஹா ரவூப் சிறப்பாக செய்திருந்தனர்.
கொண்டாட்டத்தின் இறுதியில் தேசிய கீதம் முழங்க விழா இனிதே நிறைவுபெற்றது.
- நமது செய்தியாளர் M சிராஜ்