Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/ஐரோப்பா/செய்திகள்/ரெடிங்க் தமிழ்ச் சங்கத்தின் (RTS, UK) 2024 தீபாவளி கொண்டாட்டம்

ரெடிங்க் தமிழ்ச் சங்கத்தின் (RTS, UK) 2024 தீபாவளி கொண்டாட்டம்

ரெடிங்க் தமிழ்ச் சங்கத்தின் (RTS, UK) 2024 தீபாவளி கொண்டாட்டம்

ரெடிங்க் தமிழ்ச் சங்கத்தின் (RTS, UK) 2024 தீபாவளி கொண்டாட்டம்

நவ 08, 2024


Google News
Latest Tamil News
Reading (ரெடிங்க்) தமிழ்ச் சங்கத்தின் (RTS, UK) 2024 தீபாவளி கொண்டாட்டம், கடந்த நவம்பர் 02 ஆம் தேதி JMA Academy, Harland Road, Readingல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. குத்துவிளக்கேற்றி தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. ஆனந்த் உமாபதி, மாதுரி இருவரும் இணைந்து விழா நிகழ்ச்சிகளை மிகுந்த உற்சாகத்துடனும் நேர்த்தியுடனும் தொய்வின்றி தொகுத்து வழங்கினர்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணம் ஆடல், பாடல், பேச்சு என்று ஒன்றுக்கொன்று சற்றும் குறைவில்லாத கலை நிகழ்ச்சிகளை அளித்து இங்கிலாந்தை சில மணிகளுக்குத் தமிழ்நாடாக மாற்றினர்.



அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முத்தாய்ப்பாக ரெடிங் சூப்பர் சிங்கர் Junior and Senior அமைந்தது. நடுவர்கள் ஹரி கிருஷ்ணன் (பாடகர்) மற்றும் ரேணு கண்ணன் குயிலனைய தங்கள் குரல் வளத்தின் பாடல்களினால் அரங்கத்தையே இசை மழையில் நனைத்தனர்.

அனைத்து பங்கேற்பாளர்களும் தங்களின் இனிய குரல்வளத்தால் நிகழ்ச்சிக்கு மெருகு சேர்த்து, ஒருவருக்கொருவர் சளைக்காமல் பார்வையாளர்களுக்கு இரண்டாம் தீபாவளியைப் பரிசளித்தார்கள். வெற்றி பெற்ற கலைஞருக்கு ரெடிங் மேயர் கவுன்சிலர் க்லீன் டென்னிஸ் கேடையம் வழங்கி கௌரவித்தார்.



அனைத்துக்கும் சிகரமாக அமைந்தது ரெடிங்க் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இன்சுவை விருந்து. விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் RTS அணியினர் இன்முகத்துடன் வரவேற்று விருந்தோம்பினர்.

வருகை தந்து விழாவைச் சிறப்பித்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும் உதவி கரம் நீட்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் RTS உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.



- கணேசன் கிருஷ்ணமூர்த்தி (Co-founder and Director of RTS)





      Our Apps Available On




      Dinamalar

      Follow us