/உலக தமிழர்/ஆஸ்திரேலியா/செய்திகள்/ஆக்லாந்தில் நவராத்திரி கொண்டாட்டம்ஆக்லாந்தில் நவராத்திரி கொண்டாட்டம்
ஆக்லாந்தில் நவராத்திரி கொண்டாட்டம்
ஆக்லாந்தில் நவராத்திரி கொண்டாட்டம்
ஆக்லாந்தில் நவராத்திரி கொண்டாட்டம்
அக் 13, 2024

இந்த வருடம் ஆக்லாந்தில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிறைய இல்லங்களில் கொலு வைத்து குழந்தைகளுக்கு நமது கலாச்சாரம் புரியும்படி நவராத்திரியின் சிறப்பை எடுத்து சொல்லிச் சிறப்பாக கொண்டாடினர்.
ஆலயங்களிலும் கொலு வைத்து துர்க்கா லட்சுமி சரஸ்வதிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. தமிழ் மக்கள் மற்றும் இதர மாநிலங்களை சேர்ந்தவர்களும் இந்த விழாவில் நண்பர்கள் இல்லங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் நமது இந்திய கலாச்சாரம் மிக சிறப்பும் மதிப்பும் வாய்ந்தது என்று உணரும் நல்ல பண்டிகை நவராத்திரி பண்டிகை.
ஒன்பது நாட்களும் ஒவ்வொருவர் வீட்டில் லலிதா ஸஹஸ்ரநாம்ம் மற்றும் பஜனைகள் பாடப்பட்டு எல்லோருக்கும் பிரசாதம், வெற்றிலை பாக்கு, குங்குமம் மற்றும் சிறப்பு பரிசும் அளிக்கப்பட்டது.
சுகன்யா ப்ரேம்நாத், அலமேலு ராகவன், புவனா வெங்கட்ராமன், ஹரிணி முரளீதரன், ஜெயந்தி சுந்தரேசன், துளசி வால்மீகி இல்லத்து கொலு புகைப்படங்கள் இத்துடன் இணைக்கபட்டுள்ளது
- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்