நவ 04, 2024

தமிழ் சங்கம் உகாண்டா மற்றும் PSR டிரஸ்ட், திருச்சி, தமிழ்நாடு ஆகியவை இணைந்து கம்பாலா வில் இருந்து 85கிமீ தொலைவில் அமைந்திருக்கும் ரோஸ் ஹவுஸ் ஃபவுன்டேஷன், கபேக்கா, நகாஸெகே டிஸ்டிரிக்ட் என்ற இடத்தில் அமைந்திருக்கும் தொண்டு நிறுவனத்தில் உள்ள 28 ஆதரவற்ற குழந்தைகளுக்கு புதிய துணிமணிகள், பட்டாசு மற்றும் இனிப்பு வகைகள் வழங்கி தமிழ் சங்கம் உகாண்டா நிர்வாகிகள் முதல் முறையாக உகாண்டா குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடினர். துணிமணிகளை பெற்று கொண்டு அதை அணிந்த ஒவ்வொரு குழந்தைகளின் முகத்திலும் மகிழ்ச்சியை காணமுடிந்தது.
இந்நிகழ்ச்சியின் மூலம் உகாண்டாவில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுக்கும் அந்த குழந்தைகள் தீபாவளி வாழ்த்துக்களை சொல்லி மகிழ்ந்தனர். இதற்கு உதவி செய்த PSR டிரஸ்ட்க்கு நன்றி. தகவல்: காதிரி, தலைவர், தமிழ் சங்கம் உகாண்டா
- நமது செய்தியாளர் டாக்டர் மெய்.சித்ரா