மொம்பாசாவில் வாழும் தமிழர்கள் ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்த நாளை மொம்பாசாவின் 13வது குழந்தைகள் தின விழாவாக விமர்சையாக கொண்டாடினர். தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரத்தை மையமாக கொண்ட மொம்பாசா தமிழ் சங்கம், சங்கத்தின் தலைவர் சுப்ரமணியன் தலைமையில், சிறப்பாக இவ்விழாவை நடத்தினர்.
விழாவின் சிறப்பு விருந்தினராக இந்தியாவின் துணை தூதர் ராமா காந்த் குமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சிகளை பிரியா கௌரிசங்கர், கவிதா சந்திரசேகர், ரூபெஷ்குமார், ஆகாஷ்குமார், அழகாக தொகுத்து வழங்கினர்.
சிறப்பு விருந்தினர்கள் நலமுடன் கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி கென்யா மற்றும் தமிழ் தாயின் வாழ்த்துகளுடன் தொடங்கியது.
விழாவில் மொம்பாசா தமிழ் சங்கம் மற்றும் இதர இந்திய சங்கங்களின் குழந்தைகள் பரதநாட்டியம், பாடல்கள் மற்றும் ஆந்திர பெண்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். கேரளாவின் சிறப்பு நடன குழு நிகழ்ச்சியுடன் சிறுவர் முதல் பெரியோர் வரை பலரும் பங்கேற்று கலைபண்பாட்டு விருந்தினை வழங்கினர். பார்வையாளர்களின் பெரு வரவேற்புடன் அனைத்து நிகழ்ச்சிகளும் வெற்றிகரமாக நடைபெற்றன.
விழா ஏற்பாட்டில் துணை தலைவர் சுப்ரமணி, பொருளாளர் பரமேஸ்வரன், ராஜன், கலைச் செயலாளர் கவிதா, பிரியா மற்றும் உறுப்பினர்கள் சாந்தி, தீபா, சீதா பரமேஸ்வரன், சந்திரசேகர், குமரகுரு, கிருபா, சாஹுல்ஹமீது, விக்னேஷ், ஸ்ரீனிவாசன் ஆகியோர் பங்களித்தனர்.
விழாவின் நிறைவில் காரியதரசி கௌரிசங்கர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்திய பாரம்பரிய உணவுடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
- தினமலர் வாசகி தீபா குமரகுரு