/வாராவாரம்/விருந்தினர் பகுதி/சாதா சைக்கிள்... எலக்ட்ரிக் ஆனதே... : சாதனை செய்த கோகுலசெல்வன்சாதா சைக்கிள்... எலக்ட்ரிக் ஆனதே... : சாதனை செய்த கோகுலசெல்வன்
சாதா சைக்கிள்... எலக்ட்ரிக் ஆனதே... : சாதனை செய்த கோகுலசெல்வன்
சாதா சைக்கிள்... எலக்ட்ரிக் ஆனதே... : சாதனை செய்த கோகுலசெல்வன்
சாதா சைக்கிள்... எலக்ட்ரிக் ஆனதே... : சாதனை செய்த கோகுலசெல்வன்
ADDED : ஜூலை 28, 2024 05:20 PM

கனவு கண்டால் மட்டும் போதாது. அதனை நனவாக்க கடும் முயற்சியுடன் போராட கற்றுக்கொள்ள வேண்டும். முயற்சியில் பலமுறை தோற்றாலும் ஒரு முறை வெற்றி நிச்சயம் கிடைக்கும். இதைத்தான்
''தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்'' என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
இதற்கு ஏற்ப ஆதரவற்ற நிலையிலும் ராமநாதபுரம் அன்பு இல்லத்தில் (ஆதரவற்றோர் விடுதி) தங்கி பட்டப்படிப்பு வரை முடித்து ஏதாவது சாதித்துஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் ஆர்.கோகுலசெல்வன் 21.அரசு பள்ளிகளில் வழங்கப்படும் இலவசசாதாரண சைக்கிளை, குறைந்த செலவில் நவீன வசதிகளுடன் எலக்டரிக் சைக்கிளாக தயாரித்துள்ளார் நயினார்கோவிலை சேர்ந்தஇந்த பட்டதாரி அவர் கூறுகிறார்...
அப்பா ராமச்சந்திரன் பழைய இரும்பு வியாபாரம் செய்கிறார். அம்மா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அப்போது முதல் அன்பு இல்லத்தில் தங்கி எம்.எஸ்.சி., வரை படித்துள்ளேன்.சிறு வயது முதல் எதையாவது சாதிக்க வேண்டும் என நினைப்பேன். அதன் விளைவுதான் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு பயன்படும் வகையில் குறைந்த செலவில்எலக்ட்ரிக் சைக்கிள் தயார் செய்ய வேண்டும் என்றமுயற்சி. இதனை 2022ல் துவங்கினேன். 5 முறை தயாரித்தும் ஏதாவது ஒரு குறையால் சைக்கிளை இயக்க முடியாமல் தடை ஏற்பட்டது.
அன்பு இல்லம், எனது நண்பர்கள் அளித்த நிதி உதவியுடன்சென்னை, கோவையில் மூலப்பொருட்களை வாங்கினேன்.நிறைய பணிகள் செய்து, சாதாரண சைக்கிளை அனைத்து
வசதிகளுடன் கூடிய நவீன எலக்ட்ரிக் சைக்கிளாக மாற்றியுள்ளேன். இந்த சைக்கிளில் 2 மணி நேரம் பேட்டரி சார்ஜ் ஏற்றினால் 20 கி.மீ.,செல்ல முடியும். 80 கிலோ எடை தாங்கும் திறன் கொண்டது. இது போக பின்னால் கேரியர், அலாரம், ரிமோட் கன்ட்ரோல்,எப்.எம்.ரேடியோ, மின் விளக்குகளும் உள்ளது. இந்த சைக்கிளை தயாரிக்க ரூ.30ஆயிரம் செலவானது.
மணிக்கு 25 கி.மீ., வேகத்திற்கு கீழ் செல்லும் எலக்ட்ரிக் சைக்கிள் தயாரிக்க அனுமதி தேவை இல்லை. என்றாலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் என் தயாரிப்பு பற்றி கூறி உரிய அனுமதி பெற உள்ளேன்.பள்ளி மாணவர்கள் என்னை தொடர்பு கொண்டால், அவர்களது சாதாரண சைக்கிளை எலக்ட்ரிக் சைக்கிளாக 15 நாட்களில் மாற்றித்தரலாம் என்றார்.
இவரை வாழ்த்த: 63809 01790