/வாராவாரம்/விருந்தினர் பகுதி/சீறும் சிங்கங்கள்... சிரிக்கும் காகித மான்கள்சீறும் சிங்கங்கள்... சிரிக்கும் காகித மான்கள்
சீறும் சிங்கங்கள்... சிரிக்கும் காகித மான்கள்
சீறும் சிங்கங்கள்... சிரிக்கும் காகித மான்கள்
சீறும் சிங்கங்கள்... சிரிக்கும் காகித மான்கள்
ADDED : ஜூன் 09, 2024 10:38 AM

'கையில் மிதக்கும் கனவா நீ… கை கால் முளைத்த காற்றா நீ… கையில் ஏந்தியும் கனக்கவில்லையே' என மதுரை ஓவிய ஆசிரியர் ஜான் பிரிட்டோவின் காகித விலங்கு சிலைகளை பற்றி பாடிக் கொண்டே அவற்றின் அழகையும் ரசிக்கலாம்.
'எனது மூலப்பொருட்கள் செய்தித்தாள்கள் தான். படித்து முடித்த பின் விற்பனைக்கு அனுப்பப்படும் செய்தித்தாள்களை விலங்குகள், பறவைகளாய் உருமாற்றி குழந்தைகளை அதிசயிக்க செய்கிறேன்' என்று ஆரம்பித்தார்.
மதுரை சிவகாசி நாடார் மெட்ரிக் பள்ளியில் ஓவிய ஆசிரியராக வேலை பார்க்கிறேன். காகிதத்தில் உருவங்களை உருவாக்கும் 'ஓரிகாமி' கலையை மாணவர்களுக்கு கற்றுத் தருகிறேன். தஞ்சாவூர் ஓவியம், ஆயில் பெயின்டிங், வாட்டர் கலர், கிளாஸ் பெயின்டிங், பாட் பெயின்டிங் ஓவியத்தின் அனைத்து பரிமாணங்களிலும் முகங்களையும் இயற்கை காட்சிகளையும் வரைகிறேன். தெர்மோகோலை குடைந்து உருவம் கொண்டு வருவதும் ஒரு கலை தான்.
மரப்பலகையிலோ, களிமண்ணிலோ உருவங்கள் செய்யும் போது எடை கனமாக இருக்கும். களிமண்ணில் உருவம் கொண்டு வரும் போது வெடிப்பு ஏற்படும். உடைவதற்கு வாய்ப்புள்ளது. செய்தித்தாளுடன் பசை கலந்து உருவம் கொண்டு வந்து அதில் மூங்கில் குச்சியை இணைக்க வேண்டும். அதற்கு மேல் அக்ரிலிக், எனாமல் பெயின்டிங் செய்ய வேண்டும். உருவங்கள் காய்ந்த பின் எடை குறைவதால் காகிதக்கூழ் உருவங்களை குழந்தைகள் எளிமையாக கொண்டு செல்ல முடியும். இந்த வகை பொம்மைகளை நீண்ட நாட்கள் பாதுகாக்கலாம்.
சேதமடைந்தாலும் அந்த பகுதியை மட்டும் சீரமைத்து அதே உருவத்தை கொண்டு வரலாம். களிமண் பொம்மையை விட இதில் மான், சிங்கம், புலி, கரடி, ஒட்டகச்சிவிங்கி உருவங்கள் தத்ரூபமாக இருக்கும். செலவும் குறைவு தான். சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாதவை.
ஏழை மாணவர்களுக்கு இக்கலை மட்டுமின்றி ஓவியக் கலையையும் இலவசமாக கற்றுத் தருகிறேன். அவர்களும் என்னைப் போல தேர்ச்சி பெற்ற பின் மற்றவர்களுக்கு இலவசமாக கற்றுத்தர வேண்டும் என்பது என் ஆசை என்றார்.
இவரிடம் பேச: 84899 67776