Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ 30 நாளில் திறமையை வளர்ப்பது எப்படி இரு இளைஞர்களின் இலக்கு

30 நாளில் திறமையை வளர்ப்பது எப்படி இரு இளைஞர்களின் இலக்கு

30 நாளில் திறமையை வளர்ப்பது எப்படி இரு இளைஞர்களின் இலக்கு

30 நாளில் திறமையை வளர்ப்பது எப்படி இரு இளைஞர்களின் இலக்கு

ADDED : ஜூன் 07, 2025 10:45 PM


Google News
Latest Tamil News
எனக்கு 24 வயது ஆகிறது ... இப்போது வரைக்கும் ஒன்றுமே தெரியாது... இப்படியே போனால் என் பேரப்பசங்களுக்கு என்ன கதை சொல்லுறது. We are going to learn every skill that possible to learn எனத் தொடங்கும் இவர்களின் யுடியூப் சேனல் இளசுகளுக்கானது மட்டுமல்ல, என்னால் கற்றுக் கொள்ள முடியும்; எனத் துடிக்கும் ஒவ்வொரு இதயத்திற்குமானது.... இவர்கள் பயிற்சி அளிப்பவர்கள் அல்ல; ஒரு பயிற்சியை இலக்காக வைத்து 30 நாட்களுக்குள் சாதிக்க முடிந்ததா எனப் பார்வையாளர்களை இருக்கை நுனியில் உட்கார வைப்பவர்கள்; இவர்கள் தவுபிக், லியோ.

தவுபிக் கூறுகிறார்...

நான் இன்ஜினியரிங் படிக்கும்போதே யுடியூப் தளத்தில் குறும்படங்கள் இயக்கியும், Guyskills ஆங்கில சேனலை நண்பர்களுடன் நடத்திக்கொண்டும் இருந்தேன். உடனிருந்தவர்கள் விலகிக் கொள்ள பக்கத்து வீட்டுத் தம்பி லியோ ஆர்வம் காட்ட அவனுடன் பயணம் தொடங்கியது.

நாம் ஏன் 30 நாட்களில் ஒரு திறனை வளர்த்துக்கொள்ளக் கூடாது. அது வெறும் ஒரு நாள் விஷயமாக இல்லாமல் தொழில்முறை ரீதியில் தயாராகி, நாங்கள் நினைத்த இலக்கை அடைய முடிந்ததா என மக்களுக்குக் காட்ட வேண்டும் எனத் தோன்றியது. இதற்கான பயிற்சியை மேற்கொள்ள எங்களைப் போலவே வளர்ந்து கொண்டிருக்கும் பயிற்சி நிறுவனங்களையே தேர்ந்தெடுத்தோம். 30 நாட்களில் பாட முடியுமா என முதல் காணொளி பதிவிட்டு பாசிட்டிவ் வரவேற்பு கிடைக்கும் முன்னே அடுத்த காணொளியை வெளியிட்டோம். அது உடல்ரீதியாகத் தயாராக வேண்டிய திறனான வில்வித்தை. மேடை பயம் போக்க மாடலிங் செய்ய முடியுமா எனக்கேட்டு அதை வெற்றிகரமாக முடித்தோம்.

எங்கள் வீடியோவை பார்த்து வில்வித்தையும், மாடலிங்கும் கற்றவர்கள் ஏராளம்.

ஒரேமாதிரி வீடியோக்கள் சலித்து விடும் என்பதால் நகைச்சுவை வீடியோக்கள் செய்தோம். தற்போது நாங்கள் சண்டை செய்வது போல் வீடியோக்கள் தயார் செய்து பதிவிட்டு வருகிறோம். இதனை பார்த்தவர்கள் 'தொழில்முறை ஸ்டண்ட் மாஸ்டர்களா இவர்கள்' என்று வியந்தனர். எங்களை கல்லுாரி விழாக்களில் அழைக்க துவங்கிய பிறகு தான் வீட்டில் எங்கள் திறமை மீது நம்பிக்கை அதிகரித்தது.

வீடியோக்களை பார்த்து சிலர் திட்டினாலும் நல்ல விஷயங்கள் இருந்தால் எடுத்துக்கொண்டு தனிநபர் தாக்குதல்களைச் சிரித்தபடி கடந்து விடுகிறோம். நிஜத்தை மிஞ்சும் காட்சிகளாய் இல்லாமல் ஒரே சிங்கிள் ஷாட்டில் சண்டைக் காட்சிகளை உருவாக்கி திரைத்துறையில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக முயன்று வருகிறோம் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us