/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ இதயம் தொட்ட இமயமலை அதிசயங்கள்; எட்டு டாக்டர்கள் தொட்ட சிகரங்கள் இதயம் தொட்ட இமயமலை அதிசயங்கள்; எட்டு டாக்டர்கள் தொட்ட சிகரங்கள்
இதயம் தொட்ட இமயமலை அதிசயங்கள்; எட்டு டாக்டர்கள் தொட்ட சிகரங்கள்
இதயம் தொட்ட இமயமலை அதிசயங்கள்; எட்டு டாக்டர்கள் தொட்ட சிகரங்கள்
இதயம் தொட்ட இமயமலை அதிசயங்கள்; எட்டு டாக்டர்கள் தொட்ட சிகரங்கள்

அதிகாலை பயணம்
ஐந்தாவது நாள் அதிகாலை 3:00 மணிக்கு பயணத்தை தொடர்ந்தோம். நெற்றியில் டார்ச்லைட் மாட்டிக் கொண்டு நான்கு மணி நேரம் நடந்தோம். இருட்டுக்குள் 400 மீட்டர் தொலைவு செங்குத்தாக இருந்தது பயணம். கடினமான நடைபயணம் முடிவில் பூன்மலையின் உச்சியை அடைந்தோம். இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 3300 மீட்டர் உயரத்தில் உள்ளது. இரவு முடிந்து அதிகாலை தொடங்கும் நேரத்தில் கும்மிருட்டாக இருந்தது. சூரிய உதயத்திற்கு முன், வெண்ணிற கம்பளம் விரித்தது போல சுற்றியுள்ள மலைகள் பனிபொழிவுடன் பரவசம் தந்தது.
ஆண்டுக்கு ஒரு சிகரம்
அந்த ஒரு உச்சியிலிருந்து பல மலைகளை பார்த்தோம். அன்னபூர்ணா மலை, தவுலகிரி, அன்னபூர்ணா - 2, பிஷ் டைல் மலை, ஹின்சுல், அன்னபூர்ணா - 3, கங்கபூர்ணா மலைச் சிகரங்களை காலை 6:00 மணிக்கு கண்டபோது பரவசம் ஏற்பட்டது. அங்கு நின்று சுற்றியுள்ள மலைகளின் அழகைப் பார்த்த போது, இயற்கை அழகிற்கு முன்னால், நாம் சிறு துளி என தோன்றியது. அங்கிருந்து இரு நாட்கள் நடந்து கீழே இறங்கினோம். 40 ஆண்டு நட்பில் பயணம் முழுவதும் பேசி கொண்டே அடிவாரம் தொட்ட போது, 'ஆண்டுக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு சிகரம் ஏற வேண்டும்' தீர்மானம் செய்தது தித்திப்பான அனுபவம் தான்.
ஆன்மிக உணர்வை அடைந்தோம்
எத்தனையோ நாடுகள் சென்றிருந்தாலும் இமயமலை சிவபெருமானின் அனுக்கிரகம் பெற்ற சிகரம். இந்த மலையேற்றத்தால் கடவுள் அனுகூலம் பெற்றதாக நாங்கள் உணர்ந்தோம். இமயமலை ஏறுவோரில் பெரும்பாலானோர் அமெரிக்கா, ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் தான். 20 வயது இளைஞரும், 70 வயது முதியவரும் தேக ஆரோக்கியத்துடன் இருப்பது நமக்கு பாடமாக இருந்தது. எந்த வயதிலும் உடல் ஆரோக்கியத்தை காப்பதை அவர்களைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். காட்டிற்குள் சிறு முகாமில் தங்கும் போது எந்த சூழ்நிலையிலும் வாழலாம் என வாழ்க்கை கற்றுத்தரும்.