/வாராவாரம்/சிந்திப்போமா/ ரூ.9.50 லட்சம் கஞ்சா எழும்பூரில் பறிமுதல் ரூ.9.50 லட்சம் கஞ்சா எழும்பூரில் பறிமுதல்
ரூ.9.50 லட்சம் கஞ்சா எழும்பூரில் பறிமுதல்
ரூ.9.50 லட்சம் கஞ்சா எழும்பூரில் பறிமுதல்
ரூ.9.50 லட்சம் கஞ்சா எழும்பூரில் பறிமுதல்
ADDED : ஜூன் 21, 2025 11:43 PM

சென்னை, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் வரும் வாராந்திர விரைவு ரயில், நேற்று காலை 8:00 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையம், நடைமேடை 7ல் வந்தது.
இதில், சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து சென்ற நபரிடம், ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே, சந்தேகமடைந்த போலீசார், அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
இதில், 10 பண்டல்களில் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. அவற்றின் எடை 19 கிலோ. மொத்த மதிப்பு 9.50 லட்சம் ரூபாய். விசாரணையில், ஒடிசாவை சேர்ந்த மீதும் குமார் சேதி, 30, என தெரியவந்தது.
இதையடுத்து அவர், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.