மலிவு விலை 'டேஷ் கேமரா'
பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட 'காஷியோ' (Cautio) என்ற 'ஸ்டார்ட் அப்' நிறுவனம், வாகன ஓட்டிகளுக்கான பாதுகாப்பை மேம்படுத்தவும், வருவாய் இழப்பு மற்றும் சாலை விபத்துகளைக் குறைக்கவும் மலிவு விலையில் 'டேஷ் கேமரா'க்களை உருவாக்கிறது. இதன் மூலம், நிகழ்நேர காட்சி கண்காணிப்பை செயல்படுத்த முடியும். டிரைவரின் நடத்தை, ஓட்டும் முறைகள், போக்குவரத்தில் உள்ள பொருட்களின் நிலையை தொலைவிலிருந்து கண்காணிக்க இயலும்.
பயணிகளின் விருப்பம்
வாகனங்களில் புகையைக் கண்டறிதல், சீட் பெல்ட் அணியாதது மற்றும் டிரைவரின் மொபைல் போன் பயன்பாடுகள் போன்றவற்றுக்கு விழிப்பூட்டல் வழங்குவதோடு, டிரைவரின் கவனச் சிதறல் மற்றும் சோர்வுக்கான அறிகுறிகளை உடனடியாக எடுத்துச் சொல்கிறது. இதன் மூலம், அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய முடிவதோடு, சாலையில் எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. வாகனத்தில் கேமராக்கள் இருப்பதை அறிந்த பயணிகள் இதுபோன்ற வாகனங்களில் பயணம் செய்ய விரும்புகின்றனர்.