Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பொக்கிஷம்/டோமாட்டினா தக்காளி திருவிழா

டோமாட்டினா தக்காளி திருவிழா

டோமாட்டினா தக்காளி திருவிழா

டோமாட்டினா தக்காளி திருவிழா

PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
காலை சூரியன் வழக்கம் போல உதிக்க, ஸ்பெயின் நாட்டின் வாலென்சியா அருகிலுள்ள புன்யோல் என்ற சிறிய கிராமம் கலகலப்புடன் கண்விழிக்கிறது.

காரணம் அன்று நடக்கப் போகும் தக்காளித் திருவிழாக்காணவும்,கலந்து கொள்ளவும்.Image 1463518உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள், குழந்தைகள் - எல்லோரும் ஒரே நேரத்தில் தெருக்களில் குவிகிறார்கள்.கண்களை பாதுகாக்க ஒரு கண்ணாடி,தொப்பி,அளவிலும், விலையிலும் குறைந்த உடை,முகத்தில் பரவச புன்னகை.மற்றும் எதிர்பார்ப்புடன் அனைவரும் காத்திருக்கின்றனர்.Image 1463519மணி பத்தானதும் ஒரு சைரன் ஒலிக்க, கிராமம் முழுவதும் ஆரவாரம் எழுகிறது. பல ஆயிரக்கணக்கான சிவப்பு தக்காளிகள் நிரம்பிய டிரக்குகள் ஊருக்குள் நுழைகின்றன.Image 1463520அடுத்த சில நிமிடங்களில் டிரக்கில் இருந்த தக்காளிகள் அனைத்தும் கூட்டத்தினர் கைகளில், ஒருவர் மீது ஒருவர் எறிந்து மகிழ்கின்றனர்,எறியும் தக்காளி கெட்டியாக யாரையும் காயப்படுத்தாமல் இருக்குமளவிற்கு மறக்காமல் தக்காளியை நசுக்கி பிழிந்து கொள்கின்றனர்,இப்படி எறிந்த தக்காளிகளின் சதைகளும் சாறுகளும் தெருக்களில் சிவப்பு ஆறாக ஒடுகிறது ஒரு சில இடங்களில் ஒடாமல் குளமாக தேங்கி நிற்கிறது. எறிந்தது போதாது என்று அந்த தக்காளி குளத்தில் ஒருவரை ஒருவர் துாக்கிப்போட்டு மகிழ்கின்றனர், அந்தக் சிவப்புக் கடலில் குளித்துக் கொண்டே களிப்பில் மூழ்குகின்றனர்.Image 1463521அனைவரது முகங்களில் தக்காளியின் சிவப்பு,உடம்பெங்கும் சிவப்பு,ஆடைகளில் சிவப்பு,கூடவே நடக்கும் நிகழ்ச்சிகளை பதிவு செய்யும் கேமரா லென்ஸ்களிலும் சிவப்பு இப்படி திரும்பிய பக்கமெல்லாம் சிவப்பு சிவப்பு இந்த சிவப்பு விரும்பி ஏற்றுக் கொள்ளும் சிவப்பு.

ஒரு மணி நேரம் நீடிக்கும் இந்த கொண்டாட்டத்தில் நிறைவில் யாரையும் யாருக்கும் அடையாளம் கூட தெரியாது. அனைவரும் ஒரே மாதிரியாக தக்காளிகளில் குளித்தவர்களாக காணப்படுவர்.

ஒரு மணி நேரம் முடிந்ததும் அடுத்த சைரன் ஒலி எழும் அந்த ஒலி அறிவிப்புடன் விழா நிறைவு பெறுகிறது,அனைவரும் சிரித்துக் கொண்டே தக்காளி கலவையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விடுபடுகின்றனர்.தெருக்கள் தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தப்படுகிறது ,புன்யோல் மீண்டும் அமைதியான கிராமமாகிறது, பங்கேற்றவர்களின் மனது மட்டும் 'அழிக்க' முடியாத அந்த ஆனந்த நினைவுகளால் மகிழ்கிறது.

உலகம் முழுவதிலும் கவனத்தை ஈர்க்கும் இந்த தக்காளி திருவிழா பிறந்த கதை சுவராசியமானது.

1945களில் ஊர்வலத்தில் ஏற்பட்ட சிறு சண்டை ஏற்பட்டது, அருகிலிருந்த காய்கறிக் கடைகளிலிருந்த தக்காளிகளை எடுத்து ஒருவர் மீது ஒருவர் எறிந்து கொண்டனர் அப்படி வீசி எரிந்த தக்காளியால் நியாயப்படி கோபம் வந்திருக்க வேண்டும் ஆனால் தக்காளியை எறிந்தவருக்கும் சரி,எறிவாங்கியவருக்கும் சிரிப்பையே தந்தது.

இந்த சம்பவத்தை மையமாக வைத்து அடுத்தடுத்த ஆண்டுகளில் இளைஞர்களும்,இளைஞிகளும் இந்த இடத்தில் தக்காளியை எறிந்து விளையாட நம்மூர் ஹோலி பண்டிகை போல தக்காளி எறிதல் நிகழ்வு விழாவாக மலர்ந்தது அசுர வளர்ச்சி பெற்று வளர்ந்தது.

இது தப்பு உணவுப் பொருளை வீணாக்குதல் கூடாது என்று அரசாங்கம் தடைபோட்டது ஆனால் தடை போட்டபிறகுதான் அதை உடைக்கவேண்டும் என்ற வேகம் மக்களுக்கு பிறந்தது, விண்ணப்பம், வேண்டுகோள், கோரிக்கை, ஆர்ப்பபாட்டம், போராட்டம் என மக்கள் முனைப்புடன் இருக்க அரசு மீண்டும் தக்காளித்திருவிழாவினை அனுமதித்தது. இந்த தக்காளி திருவிழாவில் பங்கு பெற விரும்புவர்களிடம் ஒரு கட்டணம் வாங்கப்படுகிறது அந்த கட்டணம் வீணாகும் தக்காளிக்கான விலையாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது,இப்பேது எல்லாம் இந்த விழாவிற்காக தனியாக தக்காளி விளைவிக்கப்படுகிறது.பெருகிவரும் ஆதரவு காரணமாகவும் ஜோடிகள் முத்தமிடும் புகைப்படங்கள், நண்பர்கள் தோளில் தூக்கி செல்லும் கலாட்டா காட்சிகள், இசை— இவை எல்லாம் சேர்ந்து இப்போது இந்த விழா சர்வதேச திருவிழாவாகிவிட்டது.

ஒவ்வொரு ஆகஸ்ட் மாதத்தின் கடைசி புதன்கிழமையன்று நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து பயணியர் வருகின்றனர்,லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் பங்கேற்க விருப்பம் தெரிவித்து வந்தாலும் பத்தாயிரம் பேர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.பங்கேற்க இயலாதவர்கள் பார்வையாளர்களாக மாறி உற்சாகம் பெறுகின்றனர்.

நிகழ்வின் போது தக்காளி தவிர வேறு எந்த பொருட்களும் வீசிட அனுமதி கிடையாது,அந்த தக்காளியையும் நன்கு நசுக்கிய பிறகே எறிதல் வேண்டும்,கண்களை பாதுகாக்க தேவை எனில் கண்ணாடி அணிந்து கொள்ளலாம்.

சுற்றுலா பயணியர் வருகையால் உள்ளூரில் வருமானம் பலவிதங்களில் கூடுகிறது.

விழா நடக்கும் நாளில் புனோல் முழுவதும் இசை, நடனம், பாரம்பரிய உணவு, கொண்டாட்டம் என்று களைகட்டியிருக்கும்.

நாலு பேர் சந்தோஷமாக இருந்தால் நல்லதுதானே.

-எல்.முருகராஜ்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us