ஒழுங்கான வாழ்க்கை முறையின் தேவையே உடற்பயிற்சி
ஒழுங்கான வாழ்க்கை முறையின் தேவையே உடற்பயிற்சி
ஒழுங்கான வாழ்க்கை முறையின் தேவையே உடற்பயிற்சி
PUBLISHED ON : ஜூன் 28, 2025 12:00 AM

சர்வதேச ஒலிம்பிக் நாளை முன்னிட்டு, மியான்மாரின் தலைநகரான யாங்கூனில் உள்ள மியான்மார் கான்வென்ஷன் மையம்,ஒரு வித்தியாசமான விழாவுக்கு சாட்சியமாக இருந்தது.
உடல்நலத்தை மக்களிடம் ஊக்குவிப்பதற்காக, உடலமைப்புப் போட்டி நடத்தப்பட்டது.இந்த போட்டியில் மியான்மார் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர்.
போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது உடல் கட்டமைப்பை, பளிச்சென்ற மேடையில் வித்தியாசமான நடைபோக்குகளிலும், வியக்கத்தக்க உடற்திறன்களிலும் பிரபலப்படுத்தினர்.
மாடல் உடலமைப்புப் போட்டி என்பது அழகை மட்டுமல்ல, அதற்குப் பின்னாலுள்ள கடுமையான பயிற்சி, ஒழுங்கான உணவுமுறை மற்றும் தன்னலம் காத்துக்கொள்ளும் பழக்கங்களை வலியுறுத்துவதாகும்.



'இது காய்கறி, மீன் சாப்பிடு, உடற்பயிற்சி செய் என விரிவுரை நடத்தும் நிகழ்வல்ல. இது ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஆரோக்கியமான வாழ்கையை முன்னெடுக்க வேண்டுமென்பதை உணர்த்தும் விழா' என்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அதிகாரி தெரிவித்தார்.
பாரம்பரிய விளையாட்டுகளுக்கு அப்பால், உடல்நலத்தையும், தனிநபர் ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் முயற்சி என்ற வகையில் பாராட்டதற்குரியது. இது போன்ற விழாக்கள், இளைஞர்களை உடற்பயிற்சி மற்றும் ஒழுங்கான வாழ்க்கைமுறையின் தேவையை உணர வைக்கும் என்பது உறுதி.
-எல்.முருகராஜ்.