இந்தியாவின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணியானது சென்னை சேப்பாக்கத்தில் நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

இப்போது எல்லாம் ஆண்கள் அணி விளையாடும் டெஸ்ட் போட்டியைக் காணவே கூட்டம் வருவதில்லை ஆகவே பெண்கள் அணிக்கு ரசிகர்கள் வரவில்லை என்று வருத்தப்படுவது தேவையில்லை, விறுவிறுப்பான ஐபிஎல் போன்ற ஒரு நாள் போட்டிகளை காணவே அனைவரும் விரும்புகின்றனர்.

ஆகவே போட்டி ஆரம்பித்த முதல் நாள் சேப்பாக்கம் மைதானம் ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடித்தான் கிடந்தது ஆனால் அது பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணியின் துவக்க வீராங்கனையான ஷபாலி வர்மா இரண்டு சதம் அடித்து அபராமாக விளையாடினார்.

இரண்டாவது நாள் பகல் 11 மணி வரை மீண்டும் அடி அடியென்று அடித்து 603 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை இந்திய அணி டிக்ளர் செய்தது,அதன் பிறகு தென் ஆப்பிரிக்கா அணி நிதானமாக விளையாடி வருகிறது.

இருபது வயதில் கிரிக்கெட்டில் அபார சாதனை படைத்துள்ள இந்திய வீராங்கனை ஷபாலி வர்மாவைப்பற்றி ஊடகங்களில் நிறைய செய்திகள் வரவே இரண்டாவது நாளான இன்று அவரது விளையாட்டைக்காண மைதானத்தில் ஒரளவு கூட்டம் வந்திருந்தது.

நல்ல வெயில் நிறைய தண்ணீர் குடித்தும் தலையை நனைத்துக் கொண்டும் வீராங்கனைகள் வெயிலை சமாளித்தனர்.மைதானத்தின் அளவு போர் லைனாக குறைகப்பட்டதை தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை.