சென்னையில் உயிர்பெற்று உலாவரும் ஒரிஜினல் பொன்னியின் செல்வன் ஓவியங்கள்
சென்னையில் உயிர்பெற்று உலாவரும் ஒரிஜினல் பொன்னியின் செல்வன் ஓவியங்கள்
சென்னையில் உயிர்பெற்று உலாவரும் ஒரிஜினல் பொன்னியின் செல்வன் ஓவியங்கள்
PUBLISHED ON : ஜன 01, 2024 12:00 AM
![]() |
சென்னையில் நடைபெற்று வரும் ஒவிய கண்காட்சியில் மறைந்த ஓவியர் மணியம், 'கல்கி'யின் பொன்னியின் செல்வனுக்காக வரைந்த ஒரிஜினல் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
![]() |
நாற்பத்தி நான்கு ஆண்டுகளே வாழ்ந்த ஓவியர் மணியம் இருபத்தியெட்டு ஆண்டுகள் ஓவியத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
![]() |
1950 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் கல்கியின் புகழ் பெற்ற வரலாற்று நாவலான 'பொன்னியின் செல்வன்'தொடருக்காக அவர் வரைந்த ஓவியங்கள் இன்றளவும் பலரது நினனவில் நீக்கமற நிலைத்து நிற்கிறது.
![]() |
ஓவியர் மணியத்தின் நுாற்றாண்டை முன்னிடடு அவர் பொன்னியின் செல்வனுக்காக வரைந்திட்ட ஓவியங்கள் உள்பட தேர்ந்து எடுத்த 125 ஒவியங்களையும்,அவரது மகனும் மா.செ.,என்று அறியப்பட்டவருமான ஓவியர் மணியம் செல்வனின் தேர்ந்து எடுக்கப்பட்ட 125 ஓவியங்களும் என சுமார் 250 ஓவியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
![]() |
ஓவியர் மணியம், பொன்னியில் செல்வனுக்காக வரைந்த பல ஒரிஜினல் படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.அவர் கதாபாத்திரங்களை உருவாக்குவதற்காக சோழர் கால கோவில்களில் இடம் பெற்றிருந்த சிலைகளை புகைப்படம் எடுத்து பின் கடுமையாக உழைத்து ஒவ்வொரு ஓவியத்தையும் உருவாக்கியிருக்கிறார்,இவர் கோவில் சிலைகளை படம் எடுக்கும் படம் கூட கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
![]() |
தானும் ஓவியம் வரைய முடிவு செய்துள்ளதாக மகன் மணியம் செல்வன் தன் தந்தையிடம் கூற,' ஒரு படம் வரைந்து வா பிறகு சொல்கிறேன்' என்றாராம் அதன்படி அவர் ஒரு படம் வரைந்து அது ஒகேவான பிறகே ஓவியராகியிருக்கிறார்,அப்படி மணியம் செல்வன் வரைந்த முதல் படம் கூட கணகாட்சியில் இடம் பெற்றுள்ளது.
மணியம் செல்வன் சரித்திரம் மட்டுமல்லாது சமூகம் சார்ந்தும்,புகைப்படத்தை இணைத்தும் சில புதுமையான ஓவியங்கள் வரைந்துள்ளார் .
![]() |
ஓவிய கண்காட்சி சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில் வருகின்ற 3 ஆம் தேதி வரைநடைபெறுகிறது, அனுமதி இலவசம். பார்வை நேரம் பகல் 11 மணி முதல் மாலை 7 மணிவரை.கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஓவியர் மணியத்தின் பேத்திகளான சுபாஷினி பாலசுப்பிரமணியன்,தாரிணி பாலகிருஷ்ணன் மற்றும் பேரன் சுப்பிரமணியம் லோகநாதன் ஏற்பாடு செய்துள்ளனர்.