கருணாநிதியின் சிறப்பு புகைப்படக் கண்காட்சி
கருணாநிதியின் சிறப்பு புகைப்படக் கண்காட்சி
கருணாநிதியின் சிறப்பு புகைப்படக் கண்காட்சி
PUBLISHED ON : மே 30, 2024 12:00 AM

![]() |
தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் சங்கத்தை துவக்கிவைத்து அவர் பேசுகையில் தனக்கும் புகைப்படக்கலைஞர்களுக்கும் உள்ள பிரியத்தை மனம்விட்டு பேசினார்.
![]() |
இந்த பிரியம் கோவை புகைப்படக்கலைஞர் சுப்புவிடம் கொஞ்சம் அதிகமாக உண்டு.
சுப்புவின் பெயரைக்குறிப்பிட்டு 'மறக்கமுடியுமா' என்ற தலைப்பில் அவருக்காக, அவரது புகைப்பட திறமையை பாராட்டி ஓரு தனிக்கட்டுரையே முரசொலியில் கடிதமாக எழுதியுள்ளதே அதற்கு சான்று.
![]() |
அப்படிப்பட்ட சுப்பு, சென்னை அண்ணாசாலையில் உள்ள அறிவாலயத்தில் கருணாநிதியின் அபூர்வ புகைப்படங்களைக் கொண்டு சிறப்பு புகைப்படக் கண்காட்சி அமைத்துள்ளார்.
கருணாநதியின் இளமைக்கால படங்கள் பல இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருக்கிறது,அது மட்டுமின்றி அவரது உடற்பயிற்சி யோகா பயிற்சியைக்கூட படமாக்கியுள்ளனர்.
![]() |
குடும்பத்தினருடன்,தலைவர்களுடன்,கலைஞர்களுடன் என்று அவரது படங்கள் ஆயிரக்கணக்கில் நீள்கிறது,வரலாற்று ஆர்வலர்களுக்கும் புகைப்பட பிரியர்களுக்கும் இந்த புகைப்படக் கண்காட்சி ஒரு விருந்தாகும்.வருகின்ற ஜூன் மாதம் 3 ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது,அனுமதி இலவசம்.
-எல்.முருகராஜ்