Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பொக்கிஷம்/பழமையான வீடுகளைத் தேடி-ஹெரிடேஜ் வாக்

பழமையான வீடுகளைத் தேடி-ஹெரிடேஜ் வாக்

பழமையான வீடுகளைத் தேடி-ஹெரிடேஜ் வாக்

பழமையான வீடுகளைத் தேடி-ஹெரிடேஜ் வாக்

PUBLISHED ON : ஜன 07, 2024 12:00 AM


Google News
Image 3522627
சென்னை மைலாப்பூரில் சுந்தரம் பைனான்ஸ் ஆதரவுடன் கடந்த 4 ந்தேதி ஆரம்பித்து நேற்றுடன் முடிவுற்ற மைலாப்பூர் திருவிழாவின் ஒரு பகுதியாக, நேற்று மைலாப்பூரில் உள்ள பழமையான வீடுகளை பார்வையிடும் ஹெரிடேஜ் வாக் நடைபெற்றது.இதனை தாஹீர சோகிப் தலைமையேற்று நடத்தினார்.அவர் மைலாப்பூரில் மிச்சமிருக்கும் பழமையான வீடுகளையும் அதன் சிறப்பம்சங்களையும் சுற்றிக்காண்பித்தார்.

Image 1217048


ஒரு காலத்தில் எல்லா வீடுகளிலும் திண்ணை என்ற ஒன்று இருந்தது காலப்போக்கில் திண்ணைகள் எல்லாம் தனி அறைகளாகவும்,வாசல்புறத்து கடைகளாகவும் மாறிவிட்டது.1940 ஆம் வருடக்கட்டடங்கள் வெகுசிலவே மிசசமாகஉள்ளது மற்றவை நவீனத்துவம் பெற்று வளர்ந்துவிட்டது.

Image 1217049


வீட்டைக்கட்டியவர்கள் தண்ணீர் வெளியேறும் குழாயைக்கூட தவளையின் வாய் போன்றும், வாசலை அரண்மனை துாண் போன்றும், பால்கனிகளை டிசைன்களுடனும் கட்டியிருந்தனர்..பெரும்பாலான வீட்டு வாசல்களில் மாடம் அமைக்கப்பட்டு அதில் விளக்குகள் எரியும்,வாசல் கதவு சிறியதாககே இருக்கும், உள்ளே நுழைபவர்கள அந்த வீட்டிற்கு தலை தாழ்ந்து வணக்கம் செலுத்திவிட்டுத்தான் நுழைவது போல இருக்கும் என்று பல விஷயங்களைக் குறிப்பிட்டார்.

Image 1217050


பழைய வீடுகளை இன்னமும் அப்படியே பயன்படுத்துபவர்களும் இருக்கின்றனர், சிலர் உள்ளே மட்டும் மாற்றங்கள் செய்துவிடடு வெளியே பழமை மாறாமல் வைத்துள்ளனர், சில வீடுகள பராமரிப்பின்றி செடி கொடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது, பொதுவாக கூட்டுக்குடும்பம் வாழ்வதற்கு ஏற்பவே வீடுகள் நிறைய அறைகளுடன் நீளமான வடிவத்தில் கட்டப்பட்டிருந்தன என்றும் குறிப்பிட்டார்.

Image 1217051


சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஹெரிடேஜ் வாக்கில் நிறைய பேர் கலந்து கொண்டனர்.

-எல்.முருகராஜ்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us