PUBLISHED ON : ஜன 07, 2024 12:00 AM
![]() |
சென்னை புத்தக்க்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ.,மைதானத்தில் ஒரு திருவிழா போல நடந்துவருகிறது.மழைதான் அவ்வப்போது மிரட்டிக்கொண்டு இருக்கிறது.
![]() |
இது அயோத்தி ராமர் கோவில் சீசன் என்பதால் ஆரம்பத்திலேயே குழந்தை ராமர் கட்-அவுட் வடிவத்தில் நின்று வரவேற்கிறார்.
![]() |
சுற்றுச்சுழலுக்கு ஏற்ப மரத்தாலான குழந்தை விளையாட்டு பொம்மைகள் நிறைய விற்கப்படுகிறது.ராமர்-ராவணனுடன் போரிடும் காட்சிகளை செஸ் பாத்திரங்களாக்கி வைத்துள்ளனர் புதுமையாக இருக்கிறது.
![]() |
கால் வலிக்குமளவு நடந்தால்தான் எல்லா ஸ்டால்களையும் பார்க்கமுடியும் அவ்வளவு ஸ்டால்கள் உள்ளன.
தாமரை பிரதர்ஸ் சார்பில் இடம் பெற்றுள்ள அரங்கில் வாசகர்கள் தங்களுக்கு பிரியமான அந்துமணியின் புத்தகங்களை விருப்பத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
எல்லா கடைகளிலுமே பத்து சதவீதம் தள்ளுபடியுடன் புத்தகங்கள் கிடைக்கின்றன சில கடைகளில் ஐம்பது சதவீத தள்ளுபடியும் வழங்குகின்றனர் இன்னும் சில கடைகளில் எது எடுத்தாலும் பத்து ரூபாய்,இருபது ரூபாய்,தொன்னுாற்று என்பது ரூபாய் என்று விற்கின்றனர்.
வானதி பதிப்பகம் சரவணன் தமது கடையில் சுந்தரகாண்டம் மலிவுப்பதிப்பு லட்சம் புத்தகங்களைத் தாண்டி விற்பதாக குறிப்பிட்டார்.இங்கேதான் இசைக்கவி ரமணன் எழுதிய காஞ்சிப் பெரியவர் உள்ளீட்ட பல புத்தகங்கள் கிடைக்கின்றன.
அரங்கி்ற்கு வெளியே தமிழக அரசின் கலைப்பொருள் கூடமும்,நடைபாதை புத்தகக்கடைகளும்,,சொற்பொழிவு நிகழ்த்துமிடங்களும் உள்ளன.
புதிய தலைப்புகளில் புதிய விஷயங்களைத் தேடும் வாசகர்களையும்,குடும்பத்துடன் வரும் வாசகர்களையும்,தங்கள் குழந்தைகளுக்கு புத்தகங்களை அறிமுகம் செய்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வாசகர்களையும் பார்க்கும் போது மனம் மகிழ்வாக இருக்கிறது.
-எல்.முருகராஜ்.