நடுக்கடலில் நடந்த கப்பல்களின் அணிவகுப்பு
நடுக்கடலில் நடந்த கப்பல்களின் அணிவகுப்பு
நடுக்கடலில் நடந்த கப்பல்களின் அணிவகுப்பு
PUBLISHED ON : பிப் 24, 2024 12:00 AM
![]() |
இந்தியக் கடலோரா காவல்படையின் 48 வது எழுச்சி தினத்தை முன்னிட்டு காவல்படையின் திறனை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் நடுக்கடலில் பல்வேறு சாகச நிகழ்வுகளை நடத்திக்காட்டினர்.
![]() |
இதற்காக எட்டுக் கப்பல்களின் விருந்தினர்கள் கடலுக்குள் கப்பல்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.இந்த எட்டு கப்பல்களும் நடுக்கடலில் அணிவகுத்து சென்றது கண்கொள்ளாக்காட்சியாகும்.
![]() |
நடுக்கடலில் பயணிக்கும் கப்பல்களில் தீபிடித்துக் கொண்டால் எப்படி தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து காப்பாற்றுவது,தண்ணீரில் தத்தளிக்கு நபரை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பது,சமூக மற்றும் தேசவிரோத காரியங்களில் கடல் மூலமாக ஈடுபடுபவர்களை எப்படி மடக்கி பிடிப்பது,மீறுபவர்கள் சுட்டுப்பிடிப்பது என்பது உள்பட பல்வேறு நிகழ்வுகளை நடத்திக்காட்டினர்.
![]() |
இதற்காக கடலோரக் காவல்படையின் ெஹலிகாப்டர்கள்,சிறிய ரக விமானங்கள்,விரைவு படகுகள் பயன்படுத்தப்பட்டன.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அதிகாரி ஒருவர் துாத்துக்குடி வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாறியதில் எங்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது என்றார்.
நவீனம் மற்றும் திறமையுடன் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் கடலோர காவல்படையின் திறன்களை அறிந்து கொண்டதில் கப்பலில் சென்ற விருந்தினர்களுக்கு பெரும் மகிழ்ச்சி
-எல்.முருகராஜ்