Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/உலக வரலாறு: நீக்கப்பட்ட விளையாட்டு!

உலக வரலாறு: நீக்கப்பட்ட விளையாட்டு!

உலக வரலாறு: நீக்கப்பட்ட விளையாட்டு!

உலக வரலாறு: நீக்கப்பட்ட விளையாட்டு!

PUBLISHED ON : ஜூலை 08, 2024


Google News
Latest Tamil News
டக் ஆப் வார் (Tug of war) விளையாடி இருக்கிறீர்களா? ஒரு நீண்ட கயிற்றின், இரு முனைகளை இரண்டு அணிகளும் பிடித்துக்கொள்ள வேண்டும். நடுவில் உள்ள கோட்டைத் தாண்டி எதிர் அணியை இழுக்கும் அணி வெற்றிபெறும். பார்ப்பதற்குச் சிறுபிள்ளைகளின் விளையாட்டு போல இருந்தாலும், ஒரு காலத்தில் ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஒரு பகுதியாக இது இருந்தது.

இது முதன்முதலில் 1900 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், தடகளப் போட்டிகளில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டது. இந்தப் போட்டியில் பல நாடுகள் பங்கேற்றன. 1920க்குப் பிறகு ஒலிம்பிக்கிலிருந்து இந்தப் போட்டி நீக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகளின் வளர்ச்சி, நிகழ்ச்சிப் பட்டியலை ஒழுங்குபடுத்துவதற்கான முடிவு ஆகியவை இதற்கு முதன்மைக் காரணங்களாகச் சொல்லப்பட்டன.

உலகளாவிய தரப்படுத்தலுடன் கூடிய விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதையே, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நோக்கமாகக் கொண்டது. இதன் விளைவாக, 'டக் ஆப் வார்' ஒலிம்பிக்கிலிருந்து விலக்கப்பட்டது.

அது அகற்றப்பட்ட போதிலும், இந்த விளையாட்டு உலகளவில் பிரபலமான விளையாட்டாக உள்ளது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us