Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/இயற்கை இன்பம்: முட்டையிடுவதற்குப் பயணம்!

இயற்கை இன்பம்: முட்டையிடுவதற்குப் பயணம்!

இயற்கை இன்பம்: முட்டையிடுவதற்குப் பயணம்!

இயற்கை இன்பம்: முட்டையிடுவதற்குப் பயணம்!

PUBLISHED ON : ஜூலை 08, 2024


Google News
Latest Tamil News
கடல் ஆமைகளில் ஆறு வகைகள் மிகவும் பிரபலமானவை. அவற்றுள் மிகச்சிறிய ஆமை 110 மி.மீ. நீளம் கொண்ட ஸ்டிங்காட். இது வடகிழக்கு அமெரிக்காவில் வாழ்கிறது. மற்ற ஐந்து வகை ஆமைகள் இந்தியக் கடற்பகுதியில் வாழ்கின்றன.

பேராமை, சிற்றாமை, அழுங்காமை, தோணி ஆமை, பெருந்தலை ஆமை என்பவை அவற்றின் பெயர்களாகும். பெருந்தலை ஆமையைத் தவிர மற்ற வகை ஆமைகள் மட்டுமே இந்தியக் கடற்கரைப் பகுதியில் முட்டையிடுகின்றன. நவம்பர் - ஏப்ரல் இவை முட்டையிட ஏற்ற காலமாகும். இதில், சிற்றாமைகள் அதிக அளவில் முட்டையிடுகின்றன.

இவை, இந்தியாவின் கிழக்குக் கடற்கரை பகுதியான ஒரிசாவின் கஹிர்மாதா, ருசிகுல்யா, ஆற்று முகத்துவாரத்தில் தான் முட்டையிடுகின்றன. இதற்காக ஆண்டுக்கு ஆறு லட்சம் சிற்றாமைகள் தமிழகம், ஆந்திர கடலோரப் பகுதியைக் கடந்து செல்கின்றன. பயணத்தின் வழியிலும் முட்டையிடும் பழக்கம் கடல் ஆமைகளுக்கு உண்டு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us