Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/திறன் உலா: பொருத்தமற்றதை நீக்குங்கள்

திறன் உலா: பொருத்தமற்றதை நீக்குங்கள்

திறன் உலா: பொருத்தமற்றதை நீக்குங்கள்

திறன் உலா: பொருத்தமற்றதை நீக்குங்கள்

PUBLISHED ON : ஜன 27, 2025


Google News
இங்கு ஓர் எண் வரிசையில் நான்கு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஒன்று மட்டும் தொடர்பில்லாதது. அதைக் கண்டறிந்து நீக்குங்கள். காரணம் விடையில் கொடுக்கப்பட்டுள்ளது.

1. கீபோர்டு, மவுஸ், பிரிண்டர், மைக்ரோபோன்

2. ஹச்.டி.எம்.எல், ரியாக்ட், சி.எஸ்.எஸ், ஜாவா

3. போன்பே, பே.டி.எம், யு.டி.எஸ், கூகுள்பே

4. ஜேம்ஸ் கோஸ்லிங், டென்னிஸ் ரிட்சி, ஜர்னே ஸ்ட்ரோஸ்ட்ரப், சார்லஸ் டார்வின்

5. பென் ட்ரைவ், கூகுள் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் ட்ரைவ், சாலிட் ஸ்டேட் ட்ரைவ்

விடைகள்:

1 . பிரிண்டர் கணினியின் வெளியீட்டுக்கருவி (Output Device). மற்ற மூன்றும் கணினியின் உள்ளீட்டுக்கருவிகள் (Input Devices).

2 . ஜாவா ஒரு பேக் எண்ட் (Backend) நிரலாக்க மொழி. மற்ற மூன்றும் ஃப்ரன்ட் எண்ட் (Frontend) நிரலாக்க மொழிகள்.

3. யு.டி.எஸ்-. என்பது ரயில் பயணச்சீட்டு முன்பதிவுக்கான செயலி. மற்ற மூன்றும் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான செயலிகள்.

4 . சார்லஸ் டார்வின் - உயிரியல் விஞ்ஞானி, மற்ற மூவரும் கனிணி நிரலாக்க மொழிகளை உருவாக்கியவர்கள்.

5. கூகுள் ட்ரைவ்- கிளவுட் கம்யூட்டிங்கில் டேட்டாக்களைச் சேமிக்கப் பயன்படுவது. மற்ற மூன்றும் கணினியில் டேட்டாக்களைச் சேமிக்கப் பயன்படுத்தும் கருவிகள்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us