PUBLISHED ON : ஜன 27, 2025
சில சிறிய சொற்கள், ஒரு சொல்லின் முன்னொட்டாக அமைந்து அருமையான பொருளைத் தரும். அவற்றில் ஒன்று 'உள்' என்பது. இந்தச் சொல்லுக்கு 'உட்பக்கம், உள்ளே, உள்ளிருப்பது' ஆகிய பொருளைக் கொள்கிறோம்.
உள் என்னும் இச்சொல்லை இன்னொரு சொல்லோடு ஒட்டும்போது, புதிய சொல் பிறக்கும். அந்தப் புதுச்சொல்லுக்கு அழகிய பொருளும் உண்டு. அவ்வாறு உள் என்பது முன்னொட்டாக அமைந்து தோற்றுவிக்கும் சொற்களைக் கோடிட்ட இடங்களில் நிரப்புங்கள்.
அ. கூரையிடப்பட்ட பெரிய அரங்கம் __________________
ஆ. மனம் __________________
இ. சிற்றூர்ப் பகுதிகளின் ஆட்சி __________________
ஈ. வெளித்தெரியாமல் அணியும் ஆடை __________________
உ. ஒரே ஊர்க்குள் இருப்பவர்கள் __________________
ஊ. நடுவில் ஒன்றும் இல்லாதது __________________
எ. உள்ளே இருக்கின்ற கருத்து __________________
ஏ. நினைப்பது __________________
ஐ. அகத்தழகு __________________
--மகுடேசுவரன்
விடைகள்:
அ. உள்ளரங்கம்
ஆ. உள்ளம்
இ. உள்ளாட்சி
ஈ. உள்ளாடை
உ. உள்ளூரார் / உள்ளூர்க்காரர்கள்
ஊ. உள்ளீடு அற்றது
எ. உட்பொருள் / உட்கருத்து
ஏ. உள்ளுவது (உள்ளத்தால் உள்ளலும் தீதே - திருக்குறள்)
ஐ. உள்ளழகு