Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

PUBLISHED ON : ஏப் 28, 2025


Google News
Latest Tamil News
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. தமிழகத்தில், எந்த மொழி வழியில் படித்தவர்களுக்கு, அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்து, புதிய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது?

அ. ஆங்கிலம்

ஆ. சமஸ்கிருதம்

இ. தமிழ்

ஈ. ஹிந்தி

2. இந்தியாவிலேயே, மின்சார வாகனங்களுக்கு மாறும் மாநிலங்களில், கடந்த நிதியாண்டில் மட்டும், 2.76 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்து, எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?

அ. தமிழ்நாடு

ஆ. தெலங்கானா

இ. மேற்குவங்கம்

ஈ. உத்தரப்பிரதேசம்

3. தங்கத்தைப் பணமாக்குவதில் இதுவரை இல்லாத புதுவரவாக, தங்கத்தைக் கொடுத்து பணம் பெறும் உலகின் முதல் தங்க ஏ.டி.எம். எந்த நாட்டில் அமைக்கப்பட்டு உள்ளது?

அ. சீனா

ஆ. அமெரிக்கா

இ. ஜப்பான்

ஈ. துபாய்

4. ரூ.10 லட்சத்திற்கு மேல் விலை கொண்ட ஆடம்பர பொருள் வாங்கும்போது, டி.சி.எஸ். (TCS) எனப்படும், விற்பனையாகும்போதே வசூலிக்கப்படும் வரியை எவ்வளவு சதவீதமாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது?

அ. 5 சதவீதம்

ஆ. 1 சதவீதம்

இ. 1.5 சதவீதம்

ஈ. 3 சதவீதம்

5. தமிழகத்தின் எந்த மாவட்டத்தில், ரூ.40 கோடி செலவில், சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது?

அ. சென்னை

ஆ. மதுரை

இ. காஞ்சிபுரம்

ஈ. திருச்சி

6. இந்தியாவில் இருந்து, பாகிஸ்தான் வழியாகப் பாய்ந்து, அரபிக் கடலில் கலக்கும் நதிகளின் தொகுப்பு, என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?

அ. ஷையோக் நதி

ஆ. காகர் நதி

இ. சட்லஜ் நதி

ஈ. சிந்து நதி

7. சவுதி அரேபியாவில் நடந்த, 18 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்கள் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் ஹிமான்சு, எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

அ. பாகிஸ்தான்

ஆ. இலங்கை

இ. இந்தியா

ஈ. மலேசியா

8. சமீபத்தில் வெளியான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவில், இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ள சக்தி துபே, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

அ. உத்தரப்பிரதேசம்

ஆ. பீகார்

இ. அசாம்

ஈ. மத்தியப்பிரதேசம்

விடைகள்: 1. இ, 2. ஈ, 3. அ, 4. ஆ, 5. அ, 6. ஈ, 7. இ, 8. அ.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us