Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/நிஜக்கதை/மோனலிசாவிற்கு கல்யாணம்.

மோனலிசாவிற்கு கல்யாணம்.

மோனலிசாவிற்கு கல்யாணம்.

மோனலிசாவிற்கு கல்யாணம்.

PUBLISHED ON : மார் 12, 2026 05:10 PM


Google News
Latest Tamil News
கடந்த 2025-ம் ஆண்டு மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்றபோது, தனது அழகான கண்களால் இணையத்தில் வைரலான மோனாலிசா போஸ்லே, கேரளாவில் தனது காதலரைத் திருமணம் செய்துகொண்டார்.

இணையத்தில் வைரலான மோனலிசா அதன்பின் வெளியே நடமாட முடியாத அளவிற்கு அவரை கேமிராக்கள் துன்புறுத்தும் அளவிற்கு துரத்தின.

அவர் மாடலாகவும் சினிமாவில் நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

'நாகம்மா' என்ற மலையாளப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிப்பதற்காக அடிக்கடி கேரளா வந்துபோனவருக்கு கேரளாவும் பிடித்துப்போனது இந்தப்படத்தில் நடிக்கும் பர்மான் கானையும் பிடித்துப்போனது.Image 1547975மோனலிசாவை வைத்து நிறைய காசு பார்க்க நினைத்த அவரது குடும்பம் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், படப்பிடிப்பு என்று சொல்லி தன் சொந்த ஊரான ம.பி.,மாநிலம் இந்துாரில் இருந்து கேரளாவிற்கு வந்தார் மோனலிசா.முன்கூட்டியே காதலன் பர்மான் கான் வந்து காத்திருந்தார்,இருவரும் திருவனந்தபுரம் அருகே உள்ள அருமனூர் நாயனார் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.Image 1547976திருமண தகவல் கிடைத்ததும் அவரது தந்தை கடும் கோபமடைந்து போலீசாரிடம் புகார் செய்தார், மோனலிசா மேஜர் பெண் அவர் விருப்பத்திற்கு மாறாக நாங்கள் நடவடிக்கை எடுக்கமுடியாது என்று போலீசார் கைவிரித்துவிட்டனர்.

இவர்களது திருமணத்திற்கு கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி மற்றும் சிபிஎம் மாநிலச் செயலாளர் கோவிந்தன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

கேரளா முற்போக்கு மிக்க மாநிலமாகும் ஆகவே இங்கே திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு செய்துவிட்டேன், நானும் கணவரும் நடிகர்கள் என்பதால் இங்கே எங்கள் கலைப்பயணம் தொடரும் என்று கூறிவிட்டு கணவர் கைபிடித்து சென்றுவிட்ட அந்த கண்ணழகியை அதன் பின் எந்த கேமராக்களும் பின் தொடரவில்லை.

இனியாவது நிம்மதியாக மோனலிசா வாழட்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us