Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/நலம்/பெண் குழந்தைகளை அச்சுறுத்தும் தைராய்டு கோளாறு!

பெண் குழந்தைகளை அச்சுறுத்தும் தைராய்டு கோளாறு!

பெண் குழந்தைகளை அச்சுறுத்தும் தைராய்டு கோளாறு!

பெண் குழந்தைகளை அச்சுறுத்தும் தைராய்டு கோளாறு!

PUBLISHED ON : ஜூன் 01, 2025


Google News
Latest Tamil News
கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகம்,கேரளாவில் 19 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள், தைராய்டு கோளாறால் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு எற்படும் இப்பிரச்னை தற்போது குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை பாதித்திருப்பது அதிர்ச்சியான விஷயமாக உள்ளது. ஹைப்போ தைராய்டிசம் எனப்படும், தைராய்டு சுரப்பி சீராக செயல்படாத தன்மையை ஆரம்பத்திலேயே கண்டறிவதால், பல உடல் பிரச்னைகளை தவிர்க்க முடியும். இதனால், பள்ளியிலேயே இந்த பரிசோதனையை கட்டாயப்படுத்த வேண்டும்.

எங்கள் மையத்தின் சார்பில், ஜூன் 2023 - ஏப்ரல் 2025 வரையிலும், 7,000க்கும் அதிகமான 14 - -19வயது குழந்தைகளுக்கு தைராய்டு பரிசோதனை செய்ததில், பாதிப்பு நான்கில் ஒருவருக்கு இருப்பது தெரிய வந்துள்ளது தைராய்டு சுரப்பி சீராக செயல்படாவிட்டால், உடல் உள் செயல்பாடு, மாதவிடாய் சுழற்சி, மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சோர்வு, படிப்பில் கவனமின்மை, மனநிலையில் மாற்றம், உடல் எடை அதிகரிப்பு, சீரற்ற மாதவிடாய், வயதிற்கேற்ற வளர்ச்சியின்மை, மாதவிடாய் ஆரம்பிப்பதில் தாமதம் போன்ற அறிகுறிகள் குழந்தைகளிடம் காணப்படும்.

ஆனால், இவற்றை டீன்-ஏஜ் குழந்தைகளின் நடத்தை இது என்று தவறாகப் புரிந்து கொள்வதால், அறிகுறிகள் முற்றிய நிலையிலேயே பரிசோதனை செய்கின்றனர்.

முடி உதிர்வது, எதிர்பாராமல் உடல் எடைக்குறைவு, தோல் வறட்சி, சோர்வு போன்ற அறிகுறிகள் தெரிந்தால், அந்த வயதில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களைத் தாண்டி, தைராய்டு கோளாறாகவும் இருக்கலாம்.

ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், முறையான மருத்துவ ஆலோசனையுடன் எளிதாக இதை நிர்வகிக்க முடியும். பல நேரங்களில் வாழ்க்கை முறை மாற்றம், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி வாயிலாக இயல்பான நிலைக்கு கொண்டு வரும் சாத்தியங்களும் உள்ளன.

பெற்றோர் மட்டுமல்ல, ஆசிரியர்களும் குழந்தைகளிடம் தெரியும் மாற்றத்தை கவனித்து, தைராய்டு பரிசோதனைக்கு பரிந்துரைத்தால், 30 வயதிற்கு மேல் தைராய்டு கோளாறால் வரும் உடல் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

பாதாம், முந்திரி பால்!

தைராய்டு பிரச்னைக்கு முறையான சிகிச்சை, உடற்பயிற்சியுடன், ஒரு கை பிடி அளவு முந்திரி பருப்பை சிறிது பாலில், இரண்டு மணி நேரம் ஊற வைத்து, அரைத்து, ஒரு டம்ளர் சூடான பாலில் கலந்து, இரவில் தினமும் குடித்தால், தைராய்டு அளவு சீராகும்.

ஹைப்போ தைராய்டிசம்

நீரில் ஊற வைத்து, தோல் நீக்கிய 15 பாதாம் பருப்புகளுடன், அரை டீ ஸ்பூன் மஞ்சள் துாள், அரை கப் வெது வெதுப்பான நீர், ஒரு டீ ஸ்பூன் பட்டை துாள், கால் டீ ஸ்பூன் சுக்குப் பொடி, ஒரு சிட்டிகை மிளகு துாள், சேர்த்து அரைத்து, சிறிது குங்குமப் பூ, ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து, தினமும் குடித்தால், தைராய்டு சுரப்பி சீராக செயல்பட உதவும்.

- 'தி இந்தியன் புட்ஸ்' புத்தகத்திலிருந்து...

டாக்டர் பிரீத்தி காப்ரா, நிர்வாக இயக்குநர்,

நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ், சென்னை9600369700info@neubergdiagnostics.com




      Our Apps Available On




      Dinamalar

      Follow us