Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/நலம்/பய உணர்வை அதிகரிக்க செய்யும் 'ஸ்குரோலிங்!'

பய உணர்வை அதிகரிக்க செய்யும் 'ஸ்குரோலிங்!'

பய உணர்வை அதிகரிக்க செய்யும் 'ஸ்குரோலிங்!'

பய உணர்வை அதிகரிக்க செய்யும் 'ஸ்குரோலிங்!'

PUBLISHED ON : மே 25, 2025


Google News
Latest Tamil News
இன்ஸ்டாகிராம், பேஸ்-புக் போன்ற சமூக வலைதளங்களை தொடர்ந்து பல மணி நேரம் பார்க்கும்போது, ஏதோ ஒன்றை இழந்துவிட்ட பய உணர்வு வருவது தான், தற்போது இளம் வயதினரை வெகுவாக பாதிக்கும் 'பெமோ' என்ற மன நோய்.

பெமோ

காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கைக்கு செல்லும் வரை தங்களின் ஒவ்வொரு அசைவையும் வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராம், ஷார்ட்ஸ், ரீல்ஸ், பேஸ்புக் என்று பல தளங்களில் வெளியிடும் வேலையை மட்டுமே செய்பவர்கள் உள்ளனர். தொடர்ந்து இந்த வீடியோக்களை 'ஸ்குரோல்' செய்யும் குழந்தைக்கு, ஒருவித பய உணர்வு ஏற்படுகிறது. இதை, FOMO - Fear Of Missing Out என்று சொல்லுவோம்.

அதாவது, இவர்களை போன்று நாம் மகிழ்ச்சியாக இல்லையோ, எல்லா நேரமும் பிசியாக ஏதோ ஒன்றை இவர்கள் செய்கின்றனர். நாம் எதுவும் செய்யாமல் வீணாக இருக்கிறோமோ என்ற பயம். பொதுவாக இது போன்ற உணர்வு, 12 - 24 வயதினருக்கு அதிகம் உள்ளது.

தவிர, இவர்களை போன்று நாமும் டிரஸ் அணியணும். புதுப் புது இடங்களுக்கு செல்ல வேண்டும். குடும்பத்துடன் சென்று ஜாலியாக வீடியோ எடுக்கணும். இன்ஸ்டாவில் அப்-லோட் செய்து 'லைக்'குகளை அள்ள வேண்டும் என்ற அழுத்தம் வந்து விடுகிறது.

இன்ஸ்டாவில் பிசியாக வீடியோ போட்டு வாழ்க்கையில் அனைத்தையும் அனுபவிக்கும் போது, நான் மட்டும் எல்லாவற்றையும் இழக்கிறேன் என்ற பய உணர்வு வருகிறது.

இதன் வெளிப்பாடு தான், எதற்கெடுத்தாலும் கோபம், பிடிவாதம், பெற்றோர் எது சொன்னாலும் எதிர்த்து பேசுவது.என்னிடம் அழைத்து வரப்படும் குழந்தைகள், விடுமுறையில் என் தோழியர் புது புது இடங்களுக்கு சென்று இன்ஸ்டாவில் போடுகின்றனர். நான் மட்டும் வீட்டிலேயே இருக்கிறேன்.

என் அப்பா, அம்மாவிற்கு எவ்வளவு சொன்னாலும் புரிவதில்லை என்கின்றனர். பெற்றோரிடம் கேட்டால், வீண் செலவு செய்யாமல், அவளின் எதிர்காலத்திற்காக சேமிக்கிறோம். அவளுக்கு இது புரியாது என்பர்.

குழந்தைகள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில் பிசியாக இருப்பவர்கள் ஏதோ சாதிக்கின்றனர் என்ற உணர்வை தருகின்றனர் என்பது நிஜம்.

நாம் சமூக வளைதளங்களில் பார்க்கும் மற்றவர்களின் வாழ்க்கை உண்மையில் அவர்களின் வாழ்க்கை தானா என்பது தெரியாது. அதற்கு பின்னால் நிறைய போராட்டம், சலிப்பு, விரக்தி இருக்கலாம்.

அதை மறைத்து, வெளி உலகிற்காக, மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இதை செய்யலாம். மாறாக, வீடியோவில் பார்ப்பது தான் நிஜம் என்று நாம் நம்புவதால் தான் பயம் வருகிறது.

இது ரியாலிட்டி கிடையாது என்பது தெரிந்தால் பய உணர்வு விலகும்.

எப்படி தவிர்க்கலாம்?

விடுமுறை நாட்களாக இருந்தாலும், தினசரி ஒழுங்குமுறையை கடைப்பிடிக்க குழந்தைகளை பழக்க வேண்டும். மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து ஒரு மணி நேரம் ஓடியாடி, விளையாட்டு, பாட்டு, இசை, ஓவியம், பிற மொழி கற்பது என்று எதில் ஆர்வம் உள்ளதோ, அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு குழந்தைகளை அனுப்பலாம்.

ஸ்குரோலிங் செய்வதன் மூலம் நேரத்தை செலவிடுவது என்பது மிகவும் எளிது, ஆனால், அதிக நேரம் ஆன்லைனில் இருப்பது என்பது உங்களது பய உணர்வை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

நமக்கு விருப்பமானவற்றை செய்த பின், தினமும் ஒரு மணி நேரம் மட்டும் மொபைல் போன் பார்க்க அனுமதித்தால், நான் எதுவும் உபயோகமாக செய்யவில்லை என்ற எண்ணம் வராது.

நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே இருக்கும்.

டாக்டர் வி. மிருதுளா அபிராமி,

மனநல மருத்துவ ஆலோசகர்,

ஐஸ்வர்யா மருத்துவமனை, சென்னை

044 - 20252025


cc@iswarya.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us