Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/தைராய்டு பாதிப்பால் ஏற்படும் உடல் மாற்றங்கள்!

தைராய்டு பாதிப்பால் ஏற்படும் உடல் மாற்றங்கள்!

தைராய்டு பாதிப்பால் ஏற்படும் உடல் மாற்றங்கள்!

1


PUBLISHED ON : மே 17, 2026

Follow on Google

PUBLISHED ON : மே 17, 2026

1


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கழுத்தின் முன் பகுதியில் அமைந்துள்ள சிறிய தைராய் டு சுரப்பி, உடலின் வளர்சிதை மாற்றம், ஆற்றல் அளவு, இதயத் துடிப்பு, உடல் வெப்பம் உட்பட பல்வேறு விஷயங்களை பராமரிக்கத் தேவையான ஹார்மோனை சுரக்கிறது.

இந்தச் சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்றால், பாதிப்பை உடல் முழுதும் உணர முடியும்.

மாற்றம்: வயது அதிகரிக்கும்போது, தைராய்டு சுரப்பதில் மாற்றங்கள் ஏற்படலாம். குறைவாக சுரந்தால், உடலின் செயல்கள் மந்தமாகும்.

குறிப்பிட்ட வயதிற்கு மேல் அதிகமாக சுரப்பது ஆபத்தானது. இதயம், எலும்புகள், வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கலாம்.

பொதுவாக நாம் பயன்படுத்தும் உப்பில், அயோடின் கலப்பது கட்டாயமாக்கப்பட்டு இருந்தாலும், அயோடின் குறைபாடால், 'காய்டர்' எனப்படும் தைராய்டு சுரப்பி வீக்கம் இன்னும் இருக்கிறது.

அறிகுறிகள்: தைராய்டு அறிகுறிகள் பெரும்பாலும் சோர்வு, வயது முதிர்வு தொடர்பான பிரச்னைகளை போலவே இருப்பதால், பலர் இதை கவனிக்கத் தவறுகின்றனர். இவற்றை முன்கூட்டியே கண்டறிந்தால், பாதிப்பை குறைக்க முடியும்.

பரிசோதனைகள்: தைராய்டை துாண்டும் ஸ்கிரீனிங் பரிசோதனை செய்யும்போது, டி.எஸ்.ஹெச்., அளவு அதிகமாக இருந்தால் ஹைப்போ தைராடிசம் எனப்படும் குறைந்த சுரப்பு; டி. எஸ்.ஹெச்., அளவு குறைவாக இருந்தால், ஹைப்பர் தைராடிசம் எனப்படும் அதிக சுரப்பை குறிக்கிறது.

'ப்ரீ டி3, ப்ரீ டி4' பரிசோதனை வாயிலாக, ரத்தத்தில் உள்ள தைராய்டு ஹார்மோன் அளவுகளை கண்டறியலாம்.

மேலும் சில பரிசோதனைகளை செய்தால், தைராய்டு சுரப்பியை பாதிக்கும், 'ஆட்டோ இம்யூன்' கோளாறுகளை கண்டறியலாம்.

கழுத்தை, 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' செய்தால், தைராய்டு முடிச்சுகள், நீர்க்கட்டிகள், சுரப்பியின் வீக்கத்தை கண்டறியலாம்.

ஊசி மூலம் நீர் எடுத்து பரிசோதிப்பதால், தைராய்டு முடிச்சுகள் இருப்பதை அறிய முடியும்.

சிகிச்சை

குறைந்த சுரப்பு: இதற்கு தினமும் தைராய்டு ஹார்மோன் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதிக சுரப்பு: ஹார்மோன் உற்பத்தியை குறைக்கும் மருந்துகள், கதிரியக்க அயோடின் சிகிச்சை, சிலருக்கு அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம்.

தைராய்டு முடிச்சுகள்: ஆபத்தற்ற முடிச்சுகளுக்கு எந்தவித சிகிச்சையும் தேவையில்லை. சந்தேகத்திற்குரிய முடிச்சுகளாக இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும்.

தைராய்டை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள...

அயோடின் கலந்த உப்பை உபயோகிப்பது, அயோடின், செலினியம், துத்தநாகம் நிறைந்த சத்தான உணவை சாப்பிடுவது, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, போதுமான அளவு துாக்கம் ஆகியவை அவசியம். டாக்டரின் ஆலோசனையின்றி தைராய்டு மருந்துகளை சாப்பிடக்கூடாது.

டாக்டர் வி.எஸ். ஹரிஹரன், மருத்துவ ஆலோசகர், கிளெனிகல்ஸ் மருத்துவமனை, சென்னை.79967 89196imfo.chn@gleneagleshospitals.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap