sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/மெனோபாஸ் காலத்தை லேடீஸ் பத்திரமாக பாஸ் செய்வது எப்படி?

மெனோபாஸ் காலத்தை லேடீஸ் பத்திரமாக பாஸ் செய்வது எப்படி?

மெனோபாஸ் காலத்தை லேடீஸ் பத்திரமாக பாஸ் செய்வது எப்படி?


PUBLISHED ON : மே 10, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 10, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீ ட்டிலுள்ளோரின் ஆரோக்கியத்தில் காட்டும் அக்கறையை, பெண்கள் தங்கள் உடல்நலன் மீதும் செலுத்துவது அவசியம், என்கின்றனர் மருத்துவர்கள்.

பெண்களுக்கு பொதுவாக, 50- 55 வயதில் ஏற்படக்கூடிய மாதவிடாய் சுழற்சி நிறுத்தம் (மெனோபாஸ்) தற்போது, 40 வயதிலே ஏற்படுகிறது. இதை மருத்துவ மொழியில், 'ப்ரீமெச்சூர் மெனோபாஸ்' என்கின்றனர்.

தன் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே, அண்டகத்தை தாக்கி அழிப்பது, ஊட்டச்சத்து குறைபாடு, அதீத மன அழுத்தம், புகைப்பிடிக்கும் பழக்கம், புற்றுநோய் சிகிச்சை எடுத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் இம்மாற்றம் நிகழ்கிறது. இச்சமயத்தில், மாதவிடாய் சுழற்சிக்கு காரணமான, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மிகக்குறைவாக சுரக்கும்.

இதனால், மாதவிடாய் நிற்பது மட்டுமல்லாமல், எலும்புகளையும் பலவீனமாக்கிவிடும். இக்காலத்தில் பெண்களுக்கு அதீத உடல் வலி, எலும்பு, மூட்டு பகுதிகளில் வலி ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

அரசு மருத்துவமனை எலும்பு முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை பிரிவு இயக்குனர் டாக்டர் வெற்றிவேல் செழியன் கூறுகையில், ''எலும்பு களை வலுவாக்குவதில், ஈஸ்ட்ரோஜன், புரோஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை சுரப்பது குறைந்தால், எலும்புகள் வலுவிழந்து விடும். இதனால் கீழே விழுந்தால் உடனே எலும்பு முறிவது, கை மணிகட்டு, இடுப்பு எலும்புகளில் விரிசல் ஏற்படலாம். இக்காலக்கட்டத்தில் பெண்களுக்கு, உளவியல் ரீதியாக மன அழுத்தம், கோபம், அதிகமாக வியர்ப்பது போன்றவை ஏற்படலாம்.

எலும்புகளை வலுவாக்க, பால், பால் சார்ந்த பொருட்கள், காய்கறி, கீரைகள், பழங்கள் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது அவசியம்,'' என்கிறார்.

- ரா.வித்யா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us