Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/நலம்/வடிகஞ்சி தரும் வடிகால்!

வடிகஞ்சி தரும் வடிகால்!

வடிகஞ்சி தரும் வடிகால்!

வடிகஞ்சி தரும் வடிகால்!

PUBLISHED ON : ஜன 19, 2025


Google News
Latest Tamil News
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதால் ஏற்படும் 'ஹைப்போ கிளைசீமியா' என்ற பிரச்னை உள்ளவர்கள், வடி கஞ்சியை வெதுவெதுப்பான சூட்டில் தினமும் ஒரு டம்ளர், 30 நாட்களுக்கு தொடர்ந்து குடித்தால், ரத்த சர்க்கரை குறைவால் ஏற்படும் தலைசுற்றல், மயக்கம், மங்கலான பார்வை போன்ற அறிகுறிகள் படிப்படியாகக் குறையும். பொதுவாகவே வாரம் ஒரு முறை இந்த வடி கஞ்சியை குடிக்கலாம். உடல் சோர்வே இல்லாமல் இருக்கும். மலச்சிக்கல் பிரச்னை இருந்தால் வடி கஞ்சியை வெதுவெதுப்பான சூட்டில், எந்த நேரத்தில் சாதம் வடித்தாலும் வடிகஞ்சியை குடிக்கலாம். ஒரு வாரத்தில் மலச்சிக்கல் பாதிப்பில் இருந்து முழுமையாக வெளிவரலாம்.

வாரம் ஒரு முறை வடி கஞ்சி குடிப்பதால் இரைப்பை தொடர்பான கோளாறுகளை தடுத்து, குடல் பகுதி இயக்கத்தை சீராக வைக்கும். வயிறு, நாக்கு, உதட்டில் எற்படும் புண்ணை சரி செய்யும் திறனும் வடிகஞ்சிக்கு உள்ளது.

எந்த வகையான மூட்டு வலியாக இருந்தாலும், பொறுக்கும் சூட்டில் வடிகஞ்சியால் மூட்டுகளில் மசாஜ் செயயலாம். நாளடைவில் வலி குறைவதை உணரலாம்.

முகப் பொலிவுக்கு வாரம் ஒரு முறையும் பரு, கரும் புள்ளிகள் இருந்தால் தினமும் வடி கஞ்சி தடவி, 10 நிமிடம் கழித்து சுடு நீரில் முகத்தை கழுவினால் தோல் பளபளக்கும்.

டாக்டர் ஆர்.மைதிலி

ஆயுர்வேத மருத்துவர், சென்னை99622 62988drmythiliayur@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us