PUBLISHED ON : ஜன 19, 2025

சுபத்ரன், மதுரை: புகை பிடிப்பதால் பற்களுக்கு என்ன பாதிப்புகள் உண்டாகும்.
புகை பிடிப்பது உடலிற்கு எந்த அளவிற்கு தீங்கு விளை விக்குமோ அதே அளவிற்கு வாய், பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். முதல் கட்டமாக பற்கள் பழுப்பு நிறத்தில் மாறும். நீண்ட காலம் புகை பிடிப்பவர்களின் பற்கள் கறுப்பாக மாறிவிடும். இவ்வாறு படியும் கறைகள் பின்னர் காரைகளாக மாறும். இந்த காரை களே கிருமிகள் தங்கும் இடமா கும். இது பற்களை சுற்றியுள்ள ஈறுகளையும் எலும்பையும் அரிக்க ஆரம்பிக்கும். இதனால் சொத்தையே இல்லாமல் கூட பற்கள் ஆடி விழும் நிலை உருவாகும்.
புகை பிடிப்பவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும். இதனால் பல் சொத்தை மற்றும் ஈறு நோய்கள் எளிதாக வரும் வாய்ப்புள்ளது. ஈறுக ளுக்கு வரும் ரத்தக்குழாய்கள் சுருங்குவதால் ரத்தஓட்டம் குறைவாக இருக்கும். ஈறுகள் பலவீனமாக மாறும். பல் தேய்க்கும் போது கூட ரத்தம் வரும். உமிழ்நீர் சுரப்பது குறைந்து வாய் உலர்வாக இருப்பது போன்று இருக்கும். உண்ணும் உணவின் சுவை சரியாக தெரியாது. வாய் புற்று நோய் வருவதற்கு முதல் காரணமே புகைப்பிடிப்பதும் புகையிலை உபயோகிப்பதும்தான்.
டாக்டர் ஜெ.கண்ணபெருமான், பல் சிகிச்சை நிபுணர், மதுரை
விக்னேஷ், திண்டுக்கல்: உண்ணி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து வெளிவருவது எப்படி.
ஸ்க்ரப் டைபஸ் எனும் வகையிலான பூச்சி திறந்த வெளி யில் உள்ள செடிகளில் உள்ளன. இவை இப்பகுதிகளில் மனிதர் கள் நடமாடும் போது உடலில் தொற்றிக்கொண்டு கடிக்கின் றன. கடித்ததிலிருந்து 7 முதல் 14 நாட்களுக்கு பிறகு உடலில் பாதிப்புகள் ஏற்படுகிறது. பாதிப் புகள் தெரிந்தவுடன் உடல் சோர்வு, சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் சாதாரண பிரச்னை என நினைக்காமல் மருத்துவ மனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். இதிலிருந்து தப்ப அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். நீராதார உணவு. பழங்களை சாப்பிட வேண்டும். வீட்டின் அருகிலுள்ள சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும். செடிகள் நிறைந்த பகுதிகளுக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வரும் போது சோப்பால் கை,கால்களின் இடுக்குகளில் நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும்.
-டாக்டர். செல்வகுமார், மாவட்ட சுகாதார அலுவலர், திண்டுக்கல்
எஸ்.உமாராணி, ஆண்டிபட்டி: எனக்கு வயது 40, இரு குழந்தைகள் உள்ளனர் கருத்தடை ஆப்பரேஷன் செய்துள்ளேன். தற்போது மார்பில் சிறு கட்டி உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது. என்ன வகைகட்டி: புற்றுநோய் பாதிப்பு ஏற்படுமா என்ற கவலை உள்ளது. இதற்கு மருத்துவ சிகிச்சை தீர்வு என்ன
18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பகம், கர்ப் பப்பை, ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை கட்டாயம். எந்த வயதாக இருந்தாலும் மார்பக கட்டி குறித்து பதட்டமோ, கவலையோ தேவையில்லை. 山 பரிசோதனை மூலம் கண்ணாடியில் பார்த்தும், சுட்டியில் கைவைத்து பார்த்தும் அதன் தன்மை குறித்து தெரிந்து கொள்ளலாம். காலச்சூழ்நிலை, பருவநிலை மாற்றம் இவற்றுடன் பாரம்பரியமாகவும் மார்பக புற்று நோய் ஏற்படலாம். கருத்தடை மாத்திரைகள் அதிகம் எடுத்துக் கொள்வதாலும் ஏற்படும். மார்பக புற்று நோய் காரணத்தை முழு மையாக கண்டு கொள்ள முடிய வில்லை. சிறு வயது குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர்ப்பது போன்ற காரணங்களாலும் ஏற்படும்.
30 வயது கடந்தவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசுமருத்துவமனைகளில் பெண் டாக்டரை எப்போது வேண்டுமானாலும் அணுகி தீர்வு காணலாம். கட்டியை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்தால் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். மார்பக கட்டி ஆப்பரேஷன் செய்து 30 ஆண்டுகளை கடந்தவர்களும் நலமாக உள்ளனர். சுட்டியை எடுத்து பரிசோதனை செய்த பின்பே புற்றுநோய் குறித்த முடிவுக்கு வர முடியும். மார்ப கத்தில் கட்டி, மார்பக காம்பில் ரத்தக் கசிவு, நீர் கசிவு உள்ளிட்ட மாற்றம் இருந்தால் மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும். அரசு மருத்துவமனைகளில் செலவே இல்லாமல் சிகிச்சை மேற்கொள்ளலாம்.
டாக்டர் இளங்கோவன், வட்டார மருத்துவ அலுவலர், ஆண்டிபட்டி
கீதாராணி, ராமநாதபுரம்: குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், ஜலதோஷம், இருமல் ஏற்படுகிறது. இதனை தடுப்பது எப்படி
பெரும்பாலும் வைரஸ்களால் தான் இந்த காய்ச்சல் ஏற்படும். மருத்துவ சிகிச்சை பெற்றாலும் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருக்கும். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்.
காய்ச்சல், ஜலதோஷம், இரு மலை கட்டுப்படுத்த பனிக் காலங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே வெளியில் செல்லும் நிலை ஏற்பட்டாலும் ஸ்வெட்டர், மப்ளர் போன்றவற்றை அணிந்து செல்ல வேண்டும். ஐஸ்கிரீம், குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். சூடான தண்ணீரையே பருக வேண்டும்.
-டாக்டர் கே.வெங்கடேசன், காசநோய், நுரையீரல் சிகிச்சை நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
ச.ஆனந்தி, சிவகங்கை: குளிர்காலத்தில் குழந்தையை பராமரிப்பது எப்படி
குழந்தைகளுக்கு தலையையும், காதுகளை மறைத்து அணியக்கூடிய ஆடைகளை அணிவிக்க வேண்டும். குழந்தைகளை குளிக்க வைக்கும் போது அதிக நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது. துணியில் ஒத்தடம் கொடுப் பது போல் உடலைத் துடைக்க வேண்டும். துடைத்த உடனே உலர்ந்த கனமான ஆடைகளை அணிவிக்க வேண்டும். குழந்தை பிறந்து 6 மாதம் வரை தாய்ப் பால் மட்டுமே கொடுக்க வேண் டும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர இடைபட்ட பகுதியில் பருக வென்னீர் கொடுக்கலாம். சாதார ணமாக பச்சிளம் குழந்தைகள் ஒரு நாளைக்கு 6 முதல் 8 முறை சிறுநீர் கழிப்பார்கள். இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குளிர்காலத்தில் நோய் தொற்று பரவக்கூடும். இந்த காலத்தில் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை முறையாக டாக் பரின் ஆலோசனை படி போட் டுக்கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் பொதுவாக வாந்தி, கை, கால் குளிர்ந்து போதல், களைப்பாக இருத்தல், குறைவாக சிறுநீர் கழித்தல், தோலின் மேற் பகுதியில் சிவப்பு நிற தடிப்பு உள்ளிட்ட அறிகுறி இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.
டாக்டர் சுருதி, குழந்தைகள் நல மருத்துவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பிரான்மலை
சந்தன மகாலிங்கம் ஸ்ரீவில்லிபுத்துார்: எனக்கு 60 வயது ஆகிறது. நுரையீரல் சளி இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதன் பாதிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்.
பொதுவாக சளி பாதிப்பு என்பது நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் கிருமி தொற்று ஏற்பட்டு, அலர்ஜி அல்லது ஒவ்வா மையால் ஏற்படலாம். புகைப்ப ழக்கம் உள்ளவர்களுக்கு நுரையீர லில் சளிச்சவ்வு பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி சளி ஏற்படலாம். நுரை யீரலில் கிருமி தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்குரிய உணவு வகைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். காய்கறி சூப்,கீரைசூப் எடுத்துக் கொள்ளலாம்.
எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, கொத்தமல்லி இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள லாம். துாங்கும் அறையில் தூசி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சாம்பிராணி புகை யினை சுவாசிப்பதை தவிர்க்க வும். மூச்சுப் பயிற்சி மேற்கொள் வதால் சளி பதிப்பு குறையும். சித்த மருந்துகளில் உள் மருந்து களாக தாளி சாதி சூரணம், முத்து சிற்பி பற்பம், ஆடாதொடை மணப்பாகு உட்பட பல மருந்துகள் உள்ளன.
டாக்டர் சுந்தரராஜ மன்னன், சித்த மருத்துவர், அரசு மருத்துவமனை, ஸ்ரீவில்லிபுத்துார்