நீர்க்கட்டிகளை போக்கும் கல்யாண முருங்கை!

PUBLISHED ON : ஜூன் 08, 2025

பி.சி.ஓ.எஸ்., எனப்படும் கருக்குழாய் நீர்க்கட்டிகள் இளம் பெண்களிடையே அதிகமாக காணப்படும் பிரச்னை.
ஒழுங்கற்ற மாதவிடாய், அடி வயிற்றில் கொழுப்பு திரட்சி, உடல் எடை அதிகரித்தல், கழுத்து, அக்குள் பகுதிகளில் தோல் கறுத்தல், முடி உதிர்வது, முகத்தில் முடி வளர்ச்சி ஆகியவை பொதுவான அறிகுறிகள்.
இவர்களுக்கு ஒழுங்கான மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்துவதும், உடல் எடையை குறைப்பதும் சவாலாக இருக்கும். குறிப்பாக சினைப்பை நீர்க்கட்டிகள், 70 -- 80 சதவீத பெண்களுக்கு சீரற்ற மாதவிடாயால் கரு முட்டை சரியான முதிர்ச்சி அடையாமல் குழந்தையின்மையை ஏற்படுத்தும்.
இப்பிரச்னைக்கு சித்த மருத்துவத்தில் கல்யாண முருங்கை, கழற்சி கொட்டை, அசோகப் பட்டை, விஷ்ணு கரந்தை, சோற்றுக் கற்றாழை, மலைவேம்பு போன்ற பல மூலிகைகள் இருந்தாலும், கல்யாண முருங்கை இலை நல்ல பலன் தரக்கூடியது.
சிவப்பு நிறத்தில் பூக்கள் பூக்கும் இம்மரத்தை முள் முருங்கை என்றும், இதன் கொட்டைகளை தரையில் தேய்த்து தொட்டு பார்த்தால் சூடாக இருப்பதால், சூடு கொட்டை என்றும் கிராமங்களில் சொல்வர்.
கல்யாண முருங்கை இலை சூரணம் 1 டீ ஸ்பூன் தினமும் வெந்நீரில் கலந்து பருகலாம்.
பத்து கல்யாண முருங்கை இலைகளை அரைத்து வடிகட்டிய சாறு 15 மி.லி., அளவு தினமும் காலை / மாலை வெறும் வயிற்றில் பருகலாம்.
தொடர்ந்து மூன்று மாதங்கள் இதை செய்தால், சினைப்பை நீர்க்கட்டிகளால் ஏற்படும் பாதிப்புகள் பெருமளவு குறையும்.
இத்துடன் உடல் எடையும் குறையும்.அதிக சர்க்கரை, எண்ணெய், கொழுப்பு உணவுகளை தவிர்த்து, புரதம், நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
உடற்பயிற்சி, நடைபயிற்சி, மனதை லேசாக்கும் யோகப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்ல; கல்யாண முருங்கை இலை நுரையீரல் சளியை போக்கும் நல்ல மருந்து.
மதுரையில் மழைக்காலங்களில் முள் முருங்கை வடை மிகவும் பிரபலம். இந்த இலைகளைக் கொண்டு ரசமும் வைக்கலாம்.
டாக்டர் மூலிகைமணி அபிராமி, மூலிகைமணி சித்த மருத்துவ மையம்96000 10696, 90030 31796consultabirami@gmail.com