Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/நலம்/பழைய சோறு சாப்பிடலாமா?

பழைய சோறு சாப்பிடலாமா?

பழைய சோறு சாப்பிடலாமா?

பழைய சோறு சாப்பிடலாமா?

PUBLISHED ON : ஜூன் 08, 2025


Google News
Latest Tamil News
பழைய காலத்தில் நம் வீடுகளில் பழைய சோறு சாப்பிடும் பழக்கம் இருந்தது. அதன் நன்மை பற்றி நிறைய பேசுவார்கள். இன்று அறிவியல்பூர்வமான பல ஆய்வு முடிவுகள் பழைய சோறு பற்றி வந்திருக்கிறது. அதைப் பற்றி சொல்கிறேன்.

சமீபத்தில் வெளி வந்த ஒரு ஆய்வுக் கட்டுரையில், பழைய சோற்றை 'ஸ்ட்ராங் ஸ்டார்ச்' என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.

முதல் நாள் சமைத்த அரிசி சோறில், மீதமுள்ள சோற்றில் தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். இதை மறுநாள் காலையில் சாப்பிடுவார்கள்.

இப்படி முதல் நாள் சமைத்த சோற்றை மறுநாள் சாப்பிடலாமா, அதில் என்ன நன்மை உள்ளது என்பது இன்றும் பலர் கேட்கின்றனர்.

ஒரு தானியத்தை சாப்பிடும் போது, எவ்வளவு விரைவாக ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்பதைப் பொருத்து, அதன் கிளைசீமிக் இன்டெக்ஸ் -ஜிஐ கணக்கிடப்படும். பழைய சோறு குறித்த ஆராய்ச்சி முடிவுகளில் தெரிந்த உண்மை, புதிதாக சமைத்த அரிசி சோறில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரை சேர்ந்த மாவு சத்து உள்ளது. அதன் காரணமாக, புதிதாக சமைத்த சோறை சாப்பிட்டதும், இச்சத்து வேகமாக ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

குறிப்பாக சர்க்கரை கோளாறு உள்ளவர்கள் சமைத்த அரிசி சோறு சாப்பிட்டால், ரத்த சர்க்கரையின் அளவு உடனடியாக அதிகரிக்கும்.

அதே சோறு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறிய பின் அடுத்த நாள் காலையில் பார்த்தால், முந்தின நாள் இருந்த மாவுச் சத்து, உள்ளேயே கடினமாக்கி ஸ்ட்ராங்க் ஸ்டார்ச்சாக மாறிவிடும்.

ஆனால், உணவின் சுவையில் எந்த மாறுபாடும் இருக்காது.

இந்த கடின ஸ்டார்ச், ரத்தத்தில் உறிஞ்சப்படும் தன்மை, அதிலிருந்து சர்க்கரை வெளியேறுவது வெகுவாக குறைகிறது.

இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக மெதுவாக அதிகரிக்கும்.

இது எல்லா கார்போஹைட்ரேட் உணவிற்கும் பொருந்தும் என்றாலும், அரிசி சோறை மட்டுமே பழையதாக சாப்பிட முடியும்.

புதிதாக செய்ததை காட்டிலும், பழையது என்று வரும் போது இத்தனை நன்மைகள் இருப்பது சமீப ஆண்டுகளாக பல ஆராய்ச்சிகளில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அதனால், பழைய சாப்பாடு தானே என்று ஒதுக்காமல், தாராளமாக சாப்பிடலாம்.

டாக்டர் ஜே.எஸ்.புவனேஸ்வரன், இயக்குநர்,

இதயநோய் மற்றும் தடுப்பு இதயநோய் துறை,

பிஎஸ்ஜி மருத்துவமனை, கோவை

99527 15222


drbhucbe@yahoo.co.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us