Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/நலம்/நினைவாற்றலை அதிகரிக்கும் பிரெய்ன் டானிக்!

நினைவாற்றலை அதிகரிக்கும் பிரெய்ன் டானிக்!

நினைவாற்றலை அதிகரிக்கும் பிரெய்ன் டானிக்!

நினைவாற்றலை அதிகரிக்கும் பிரெய்ன் டானிக்!

PUBLISHED ON : பிப் 16, 2025


Google News
Latest Tamil News
தேர்வு நேரம் நெருங்கி விட்டதால், குழந்தைகள் அதிகமாக லேப்டாப், டேப் என்று தகவல்களை தேடுவதிலும், பாடப் புத்தகங்களை படிப்பதிலும் முனைப்பாக இருப்பர். இந்த சமயத்தில், மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்தி, நினைவாற்றல், கவனச்சிதறல் இல்லாமல், முழு மனதுடன் கற்கும் திறனை அதிகரிக்க, நான் சொல்லப் போகும் ஐந்து 'டிப்ஸ்'களை 15 நாட்களுக்கு, பின்பற்றினாலே, மூளையின் ஆற்றலை அதிகரிக்க உதவி செய்யும்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து விதைகளிலும் மூளையின் திறனை அதிகப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

குறிப்பாக, சூரியகாந்தி விதைகளை பிரைன் டானிக் என்றே சொல்லலாம். தினமும் 10 விதைகளை அப்படியே சாப்பிடலாம். வறுத்து பொடித்து, பழச்சாறு, காய்கறி சாலட்டில் கலந்தும் தரலாம்.

இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட், செல்களை புதுப்பித்து தரும். ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும். ஒமேகா 3 பேட்டி ஆசிட்ஆரோக்கியத்திற்கு நல்லது.

அடுத்தது, பிரக்கோலி, காலிபிளவர், முட்டைக் கோஸ் தினமும் ஏதாவது ஒன்றை சமைத்து சாப்பிடலாம். பிஞ்சாக இருந்தால் பச்சையாகவும் சாப்பிடலாம்.

இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் மூளை செயல் திறனை அதிகரிப்பதோடு, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

தக்காளியில் லைக்கோபின் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும். இதில் உள்ள காமா அமினோ பியூட்ரிக் அமிலம், ரத்த ஓட்டத்தை அதிகரித்து, சுறுசுறுப்பாக வைக்கும். இதனால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.

உடலுக்கு சக்தியை தருவதுடன் உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவும். தினமும் ஒரு தக்காளியை பச்சையாக சாப்பிடுவதால் பலன் அதிகம். வால்நட் என்கிற அக்ரூட்டை கர்ப்பிணிகள் நான்காவது மாதத்தில் இருந்து தினமும் இரண்டு சாப்பிடலாம்.

கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும். இதில் உள்ள பிளேவினாய்டு, செலீனியம், குரோமியம், மெக்னீசியம் என்று பல நுண்ணுாட்டச் சத்துக்களின் கலவை இது. மூளையின் செயல் திறனை துாண்டி, எப்போதும் புதிதாக வைத்திருக்கும்.

சமீபத்தில் ஒரு பள்ளியில், செஸ் விளையாடும் குழந்தைகளுக்கு தினமும் வல்லாரைக் கீரை கொடுத்து, அவர்களின் மூளை செயல்பாட்டை கண்காணித்தோம். முன்பைக் காட்டிலும், குழந்தைகளின் மன வலிமை அதிகரத்து, புதிய யுக்திகளுடன் திறமையை வெளிப்படுத்தினார்கள்.



டாக்டர் யோ.தீபா,

யோகா மற்றும் இயற்கை மருத்துவர்,

அரசு இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,

சென்னை


sakshaayaan@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us