/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மானூர் வட்டார வள மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு தொழில் பயிற்சிமானூர் வட்டார வள மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு தொழில் பயிற்சி
மானூர் வட்டார வள மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு தொழில் பயிற்சி
மானூர் வட்டார வள மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு தொழில் பயிற்சி
மானூர் வட்டார வள மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு தொழில் பயிற்சி
ADDED : ஆக 22, 2010 04:37 AM
திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் 6,7 மற்றும் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எளிய முறையில் தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது.
மானூர் வட்டார வள மையத்தின் சார்பில் நேற்று நடந்த பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
கருத்தாளர்களாக மகேஸ்வரி, அனுசுயா, விஜயலட்சுமி, விக்டோரியா செயல்பட்டு பயிற்சி அளித்தனர். பினாயில், வாஷிங் பவுடர், சொட்டு நீலம் தயாரித்தல், பெண்கள் பயன்படுத்தும் காலணி, நெக்லஸ், குறைந்த செலவில் அணிகலன்கள் தயாரிப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை தொடர்ந்து ஆசிரிய, ஆசிரியைகள் 6,7,8ம் வகுப்புகளில் மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கின்றனர். ஏற்பாடுகளை மைய ஒருங்கிணைப்பாளர் செல்வி, ஜெயக்குமார் செய்திருந்தனர்.