Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஊக்கத்தொகை பெற விருப்பமா?விளையாட்டு வீரருக்கு அழைப்பு

ஊக்கத்தொகை பெற விருப்பமா?விளையாட்டு வீரருக்கு அழைப்பு

ஊக்கத்தொகை பெற விருப்பமா?விளையாட்டு வீரருக்கு அழைப்பு

ஊக்கத்தொகை பெற விருப்பமா?விளையாட்டு வீரருக்கு அழைப்பு

ADDED : ஆக 24, 2010 02:08 AM


Google News

கரூர்: '2010-11ம் கல்வியாண்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களில் தகுதியுடைய விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்க உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது' என, கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.கலெக்டர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு விளையாட்டு மே ம்பாட்டு ஆணையம் ஊக்க உதவித்தொகையாக உயர்நிலை, மே ல்நிலைப்பள்ளிகளில் பயிலும் விளையாட்டு வீரருக்கு 5,000 ரூபாயும், கல்லூரி, பல்கலையில் பயிலும் விளையாட்டு வீரருக்கு 6,500 ரூபாயும் வழங்கப்படுகிறது.

ஊக்க உதவித்தொகை பெறுவதற்கு 2009 ஜூலை முதல் தேதியிலிருந்து, 2010 ஜூன் 30ம் தேதி வரையுள்ள காலகட்டத்தில் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற தகுதியும், திறனுமுள்ள விளையாட்டு வீரர் விண்ணப்பிக்கலாம். ஒருவர் ஒரு விளையாட்டுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்.உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டு தனித்திறன் போட்டிகளில் முதல் மூன்று இடத்தில் ஒன் றை பெற்றிருக்க வேண்டும். குழுப்போட்டியில் முதல் அல்லது இரண்டாமிடம் பெற்றிருக்க வேண்டும்.தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண் டை, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, டென்னிஸ், மேசைப்பந்து, ரோயிங், துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், நீச்சல், டிரையத்லான், வாலிபால், பளுதூக்குதல், சிறகுப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கபடி, வாள்சண்டை, டேக்வாண்டோ, செபக்டக்ரா, ஸ்கேட்டி ங், பீச்வாலிபால், கிரிக்கெட், øகிள் ஓட்டுதல், படகு ஓட்டுதல், செஸ், கேரம், டென்னிகாய்ட், கோ-கோ, பவர்லிஃப்டிங், சிலம்பம், எறிபந்து மற்றும் பூப்பந்து விளையாட்டுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.கல்லூரி, பல்கலை மாணவர்கள் அகில இந்திய பல்கலைக்கு இடையேயான விளையாட்டு தனித்திறன் போட்டியில் முதல் மூன்று இடத்தில் ஒன்றை பெற்றிருக்க வேண்டும். குழு ப்போட்டியில் முதல் அல்லது இரண்டாம் இடம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பம் நேரில் பெற விரும்புவோர் தங்கள் விளையாட்டு உண் மை சான்றிதழுடன் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகம் வரவேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, 'விளையாட்டு ஊக்க உதவி தொகைக்கான விண்ணப்பம்' என்று எழுதிய தபால் கவரில் அக்டோபர் 31ம் தேதிக்குள் 'செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116, ஈ.வெ.ரா., நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை - 84' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us