வழிப்பறி திருட்டு: மும்பை முதலிடம்
வழிப்பறி திருட்டு: மும்பை முதலிடம்
வழிப்பறி திருட்டு: மும்பை முதலிடம்
ADDED : ஆக 23, 2010 04:55 AM
மும்பை: நாட்டின் பொருளாதார தலைநகராக விளங்கிவருவது மும்பை நகரம்.
அதுபோல் தற்போது செயின் திருட்டு வழக்கில் முதலிடத்தை பெற்றிருப்பதும் மும்பை நகரமே. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,100 செயின் திருட்டு நடைபெற்றுள்ளது. இது மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது மிக உயர்ந்த பட்சமாகும். அடுத்த படியான இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது தலைநகர் புதுடில்லி .அதை தொடர்ந்து புனே நகரமும் இந்த லிஸ்டில் சேர்ந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஆயிரத்து 600 செயின் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.கடந்த ஐந்து ஆண்டுகளில் மும்பை நகரத்தில் இது போன்ற சம்பவங்கள் சீராக வளர்ந்து வந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வழிப்பறி வழக்கில் தீர்ப்பு காணப்படுவது என்னவோ 45 சதவீதம் மட்டுமே. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது செயின் திருடுபவர்களின் முக்கிய இடமாக அந்தேரிபோன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களை தான் தேர்வு செய்கின்றனர் என்று கூறினார். மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக கூடுதல் போலீஸ்காரர்களை பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.