ADDED : ஆக 23, 2010 03:08 AM
வில்லியனூர் : வில்லியனூர் மகாலட்சுமி கோவிலில் திரு விளக்கு பூஜை நடந்தது.வில்லியனூர் அருகே உள்ள மகாலட்சுமி நகரில் அமைக்கப்பட்டுள்ள மகாலட்சுமி கோவிலில் வரலட்சுமி நோன்பை முன் னிட்டு அம்மனுக்கு காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து தீபாராதனையும், மாலை 5 மணிக்கு அம்மனுக்கு திருவிளக்கு பூஜை நடந்தது.விளக்கு பூஜையில் வில்லியனூர், கோட்டைமேடு, ஆரியப்பாளையம், சேதநத்தம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். 150க் கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அன்பு குடும்பத்தினர் செய்திருந்தனர்.


