ADDED : ஆக 24, 2010 03:02 AM
மதுரை: மதுரை மண்டேலா நகர் அம்பேத்கர் பண்பாட்டு மையத்தில், வி.ஏ.ஓ., தேர்வுக்கான இலவச பயிற்சி துவக்க விழா நடந்தது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பிச்சம்மாள் துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் ராமர் வரவேற்றார். தாட்கோ மேலாளர் ரத்தினம், மைய இயக்குனர் மரியநாதன் பங்கேற்றனர்.