/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பி.எஸ்.என்.எல்., தொ.மு.ச.,நெல்லையில் 27ம் தேதி ஆலோசனைபி.எஸ்.என்.எல்., தொ.மு.ச.,நெல்லையில் 27ம் தேதி ஆலோசனை
பி.எஸ்.என்.எல்., தொ.மு.ச.,நெல்லையில் 27ம் தேதி ஆலோசனை
பி.எஸ்.என்.எல்., தொ.மு.ச.,நெல்லையில் 27ம் தேதி ஆலோசனை
பி.எஸ்.என்.எல்., தொ.மு.ச.,நெல்லையில் 27ம் தேதி ஆலோசனை
ADDED : ஆக 23, 2010 04:43 AM
திருநெல்வேலி:நெல்லை மாவட்ட பி.எஸ்.என்.எல்.தொ.மு.ச.உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் 27ம் தேதி வண்ணார்பேட்டையில் நடக்கிறது.
நெல்லை மாவட்ட பி.எஸ்.என்.எல்.தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நெல்லை மாவட்ட பி.எஸ்.என்.எல்., தொ.மு.ச., உறுப்பினர்கள், ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம் வண்ணார்பேட்டை பி.எஸ்.என்.எல்.தலைமை அலுவலகத்தில் வரும் 27ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.
சிறந்த முறையில் பணியாற்றி வரும் சங்கத்தின் வளர்ச்சி பொறுக்காமல் அதை சீர்குலைக்கும் வகையில் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வரும் விஷமிகள் மீது தகுந்த நடவடிக்கை எப்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.பாரம்பரிய மிக்க சங்கத்தின் நன் மதிப்பை காப்பாற்றும் பொருட்டு, வீண் குழப்பம் விளைவிக்கும் அந்த விஷமிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளவேண்டும்.இத்தகவலை மாவட்ட செயலாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.