புதூர்:மதுரை மாநகராட்சியும், புறநகர் பகுதியும் இணையும் பகுதியில் உள்ளது புதூர் நான்காவது வார்டு.
சம்பக்குளம் கருப்பையா (பலசரக்கு கடை உரிமையாளர்): பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பிறகு அமைத்த ரோடுகள் தரமானதாக இல்லை. மழையில் ரோடுகள் சேதமாகி குண்டும், குழியுமாக உள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. மழை நேரத்தில் கழிவுநீர் வீடுகளை சூழ்ந்து கொள்கிறது. சிலர் பாத்திரங்களில் எடுத்து வேறு இடத்தில் ஊற்றுகின்றனர். குப்பைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி ஊழியர்கள் வருவதில்லை. ரோடு ஓரங்களில் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது, என்றார்.தொழிற்பேட்டையை உருவாக்கியகப்பலூர் தொழிலதிபர் சங்கம்மதுரையில் இருந்து 18 கி.மீ., தொலைவில் உள்ள, தமிழகத்தின் இரண்டாவது பெரிய சிட்கோ தொழிற்பேட்டையில் கப்பலூர் தொழில் அதிபர் சங்கம் இயங்குகிறது. ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டு 1992ல் இச்சங்கத்தை துவங்கியவர் டி.சக்ரவர்த்தி. இச்சங்கத்தின் கீழ், 300 தொழிற்சாலைகள், 16 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். ஐந்தாண்டுகளுக்கு முன், கப்பலூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சங்க முயற்சியால், தொழிற்பேட்டைக்கு தேவையான போஸ்ட் ஆபீஸ் அமைக்கப்பட்டது. சங்க கட்டடத்தின் ஒரு பகுதியில் இயங்கும் டெக்ஸ்டைல் சென்டர், அத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. ஏழு ஆண்டுகளாக சங்கத்தின் பெரும் முயற்சியால், மத்திய அரசின் 80 சதவீதம் மானியம் பெற்று, 2.10 கோடி ரூபாய்க்கு ரோடுகள் அமைக்கப்பட்டதோடு, மழைநீர் வடிகாலும் புதுப்பிக்கப்பட்டது. தற்போது 45 லட்சம் ரூபாயில் தொழிற்பேட்டை இணைப்புச்சாலைகள் புதுப்பிக்கப்படுகின்றன.கப்பலூர் தொழிற்பேட்டையின் உள்அமைப்பாக, மகளிர் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. 2006ல் இதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. சுமார் 30 ஏக்கரை 25 சென்டுகளாக பிரித்து, தலைமுறை பெண் தொழிலதிபர்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 20 பெண்கள் தொழில் தொடங்கியுள்ளனர். பல்வேறு அமைப்புகளிலும், அரசின் ஆலோசனைக் குழுக்களிலும் உறுப்பினராக இருந்து, தொழிற்பேட்டை வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் இச்சங்கத்தின் தற்போதைய தலைவராக ஜெ.செல்வம் இருக்கிறார்.


