/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வீரவநல்லூரில் மனித உரிமை ஆர்வலர்கள் கைது போலீசார் மீது மக்கள் கண்காணிப்பகம் புகார்வீரவநல்லூரில் மனித உரிமை ஆர்வலர்கள் கைது போலீசார் மீது மக்கள் கண்காணிப்பகம் புகார்
வீரவநல்லூரில் மனித உரிமை ஆர்வலர்கள் கைது போலீசார் மீது மக்கள் கண்காணிப்பகம் புகார்
வீரவநல்லூரில் மனித உரிமை ஆர்வலர்கள் கைது போலீசார் மீது மக்கள் கண்காணிப்பகம் புகார்
வீரவநல்லூரில் மனித உரிமை ஆர்வலர்கள் கைது போலீசார் மீது மக்கள் கண்காணிப்பகம் புகார்
திருநெல்வேலி : வீரவநல்லூரில் மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் மீது மக்கள் கண்காணிப்பகம் புகார் தெரிவித்துள்ளது.
மதுரையில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு பயிற்சி நடந்தது.
இதில் நெல்லைக்கு 2 குழுவினர் அனுப்பபட்டதில் வீரவநல்லூர் சென்ற தலித் பவுன்டேஷன் பார்ட்னர்கள் அங்கு சுரேஷ் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது தொடர்பாக விசாரித்தனர். அப்போது வீரவநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் இக்குழுவினரை போலீசார் 2 மணி நேரம் விசாரித்து நள்ளிரவில் கைது செய்து மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீஸ் உயர் அதிகாரிகள் தூண்டுதலின் பேரில் வீரவநல்லூர் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். கைது செய்தது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டு நெறிமுறைகளை போலீசார் கடைபிடிக்கவில்லை. இதற்கு மக்கள் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவிக்கிறது.
இப்பிரச்னை தொடர்பாக மாநில அளவில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக வரும் 23ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீசார் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.
இதுசம்பந்தமாக தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் புகார் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மக்கள் கண்காணிப்பகம் மற்றும் தலித் பவுன்டேஷன் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு நிர்வாக இயக்குனர் கூறினார்.
பேட்டியின் போது மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜன், வக்கீல் பிரிட்டோ, மக்கள் கண்காணிப்பகம் கணேசன், மனித உரிமைக் களம் பரதன் ஆகியோரும் உடனிருந்தனர்.